கவலைகளில் கரைந்தபடி...




"இருக்கிற கவலையெல்லாம்
கழிச்சுக் கட்டிவிட்டு
சிறுபிள்ளைபோல
சந்தோஷமாய் இருக்கப்பாரு"

என்
அவஸ்தைகளைப் புரிந்துகொண்டு
அம்மா சொன்னாள்
அலைபேசி வழியாக...

இருக்கிற வேலை நாளை
நிலைக்குமா எனும் கவலை,
படிக்கிறபிள்ளை நன்றாய்ப்
படிக்கலையே எனும் கவலை
மகளுக்குக் கல்யாணம்
அமையாத மனக்கவலை...

அம்மாவை அநாதரவாய்
விட்டுவந்த வலிக்கவலை
மனைவியின் எதிர்பார்ப்பைத்
தீர்க்காத பெருங்கவலை
படுத்துகிற உடல்வருத்தம்
போகாத ஒரு கவலை

வாங்குகிற மருந்தெல்லாம்
போலிதானோ எனும் கவலை
தூங்குகையில் திருடனவரக்
கூடுமென்ற பயக்கவலை
வாங்கிய கடனை நண்பன்
கொடுக்கணுமே எனும் கவலை...

எந்தக் கவலையை
எப்படிக் கழிப்பதென்று
சிந்தனை முழுவதும்
கேள்விகளாய்க் கிளம்பிவிட
இல்லாமல்போனது தூக்கம்...

இருக்கிற கவலையுடன்
இரவெல்லாம் தூங்காத
கவலையும் சேர்ந்துகொள்ள,
துக்கத்தின் கணக்கிலொன்று
மொத்தத்தில் அதிகமாச்சு!

படம்: இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது

கருத்துகள்

  1. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...பாடல் நினைவுக்கு வருகிறது....ஒன்று மாற்றி ஒன்று..முன்னொரு காலத்தில் என் அம்மாவைப் பார்த்து நான் சொன்னது..
    எப்பவும் ஏதாவது ஒரு கவலையா....அப்டின்னு..இன்னிக்கு...history repeats..

    பதிலளிநீக்கு
  2. கவலை எனக்கும்தாங்க...

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கணக்கு எப்பவும் அதிகமாதான் ஆகிட்டே போகும்:))! நல்ல கவிதை சுந்தரா! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. கவலையை மறக்க புது கவலை ஒன்றுதான் வழியோ?

    பதிலளிநீக்கு
  5. நல்லாயிருக்குங்க

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!