இருவகை இரவுகள்



குற்றாலம் கொடைக்கானல்
குமரகம் குலுமணாலி
எப்போ பார்த்தாலும்
இதே இடங்கள்தானா?

எந்தஊரும் பிடிக்கல
என்றுசொல்லிக் கதவடைத்து,
உறக்கமின்றிப் புரண்டது
'இருக்கிற' வீட்டுப்பிள்ளை...

வானத்துக்கூரை
வருடுகிற மென்காற்று
ஓலமிடும் ஆந்தைச்சத்தம்,
ஊடே ஒரு மழைத்துளி

தூரத்து இடிமுழக்கம்
ஊளையிடும் நாயின்சத்தம்
இவற்றோடு,
அம்மாவின் அரவணைப்பும்
அப்பாவின் அருகாமையும்சேர,

கனவில்,
காகிதக் கப்பலோட்டிக்
கண்டமெல்லாம் சுற்றிவந்தது
சாலையோரத் தொழிலாளியின்
சட்டையில்லாத பிள்ளை.

கருத்துகள்

  1. ரொம்ப ரொம்ப அழகு சுந்தரா.

    பதிலளிநீக்கு
  2. குறுஞ்சி குறுஞ்சிதான்,
    அது நெருஞ்சியை தீண்டிணாலும்,
    குறுஞ்சியாகி விடுகிற‌து.
    புழுவைக் கொட்டிக் கொட்டி
    வ‌ண்ண‌ப்பூச்சியாக்கும் உலை
    உங்க‌ளுக்கு கைவ‌ந்த‌ க‌லை.

    பதிலளிநீக்கு
  3. வருகைதந்து கருத்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

    நன்றி மால்குடி!

    நன்றி கார்த்திக்!

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் அண்ணா!

    நன்றி மதுரை சரவணன்!

    நன்றிகள் வாசன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!