Wednesday, August 25, 2010

மூணாங் கிளாஸ் கல்யாணம்!



அவள் மூணாவது,
அவன் நாலாவது...

அகல அகலமாய்ப்
புகைப்படம்போட்டு
அறிவிப்புச் செய்திருந்தார்கள்...

ஒண்ணாவதுக்கே
ஒருவழியும் இல்லாமல்
பெண்ணாய்ப் பிறந்ததற்காய்ப்
பெருமாளை நொந்தபடி,
கண்ணில்பட்ட செய்தியைக்
கசக்கியெறிந்தாள் அவள்...

அதைப்
பின்னாலிருந்து பார்த்துப்
பெருமூச்சுவிட்டார்,
பிரம்மச்சாரிப்
பெருவயிற்றுப் பிள்ளையார்!

7 மறுமொழிகள்:

அம்பிகா said...

\\அதைப்
பின்னாலிருந்து பார்த்துப்
பெருமூச்சுவிட்டார்,
பிரம்மச்சாரிப்
பெருவயிற்றுப் பிள்ளையார்\\
பாவம் பிள்ளையார்!!

அமைதிச்சாரல் said...

//அதைப்
பின்னாலிருந்து பார்த்துப்
பெருமூச்சுவிட்டார்,
பிரம்மச்சாரிப்
பெருவயிற்றுப் பிள்ளையார்//

அது சரி!!.... அவர் கவலை அவருக்கு :-))))

காமராஜ் said...

சுந்தரா... வந்தாச்சா ?
எங்கப்பா போயிருந்தீங்க,

'ஒண்ணாவதுக்கே வழியில்லாமல்'
தைக்கிற வரிகள்.அருமை.

பாலன் said...

அக்கா கவிதை அருமை இருந்தாலும் இன்று (26.08.10) உங்கள் திருமண நாளில் எனது வாழ்த்துகள் அத்தானுக்கும் வாழ்த்தினைத் தெரியப் படுத்துங்கள் :)

சுந்தரா said...

நன்றி அம்பிகா!

நன்றி அமைதிச்சாரல்!

சுந்தரா said...

//காமராஜ் said...

சுந்தரா... வந்தாச்சா ?
எங்கப்பா போயிருந்தீங்க,//

வேறெங்கயும் போகல... நம்ம ஊர்ப்பக்கம்தான் வந்திருந்தேன் அண்ணா :)

நன்றி!

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்....

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails