எல்லாம்...அம்மாவால வந்தது!


அப்பா, உனக்கு எப்போ
தொப்பை வந்திச்சு?

உங்கம்மா வந்ததுக்கப்புறம்...


உச்சந்தலையில வழுக்கை?

அதுவும் கூட,
அம்மா வந்தப்புறம்தான்...


கிட்டப்பார்வைக் கண்ணாடி?

எத்தனை தடவை
அதையே நான் சொல்லுறது?


வாசல்ல நிக்கிற வண்டி?

............

'அதுவும் அம்மாவாலன்னு
அழுத்தமாச் சொல்லுங்க'
-அடுப்படியிலிருந்து வந்தது குரல்...

அதெல்லாம்,
சொன்னாப் புரியாது
சீக்கிரம்போய் தூங்கு நீ,
செல்ல மகளை
மெல்ல நகர்த்தினான் அவன்!

படம் : நன்றி http://www.cultureandpublicaction.org

கருத்துகள்

  1. இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

    நச்சென்று ஒரு கவிதை!

    பதிலளிநீக்கு
  2. சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?

    பதிலளிநீக்கு
  3. செம கவிதை....யதார்த்த வரி...கலக்குங்க!!

    பதிலளிநீக்கு
  4. //velji said...

    இப்படித்தான்...சிறு பிள்ளைகள் பெரிய கேள்விகளை கேட்பதை வழக்கமாக வத்திருக்கிறார்கள்.

    நச்சென்று ஒரு கவிதை!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வேல்ஜி!

    பதிலளிநீக்கு
  5. //காமராஜ் said...

    சுளீர்ன்னு உறைக்கிற மாதிரி கேள்வி.உண்மையல்லவா ?//

    வாங்க அண்ணா...நிஜம்தான் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //ஹுஸைனம்மா said...

    :-)))))))//

    சிரிச்ச முகத்துக்கு நன்றி ஹுசைனம்மா :)

    பதிலளிநீக்கு
  7. சமையலறையிலிருந்து வந்த பதில்தான் நெத்தியடி!!!
    அதை அவர்களே சொல்ல மனசு வராதே!!!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!