ஒற்றை மனுஷியும் கற்றை எதிர்பார்ப்புகளும்


காலையிலிருந்து,
கண்ணாடியைத் தேடுறேன்,
எடுத்துத் தரணும்னு
யாருக்கும் தோணலை,
கடுப்பாகச் சொல்லிவிட்டுப்
படுத்துக்கொண்டார் தாத்தா...

என்னோட வீட்டுப்பாடத்தை
எப்பதான் சொல்லித்தருவே?
எழுதுகிற ஏட்டிலிருந்து
கழுத்தைத் திருப்பி,
ஏறிட்டுப் பார்த்துவிட்டு
வீறிட்டான் தம்பி...

சட்டையைத் துவைக்கச்சொன்னேன்
அதைத்தான் செய்யவில்லை,
இஸ்திரிபோட்டாவது
எடுத்துவைத்திருக்கலாம்
கட்டைக் குரலில்
கத்திக்கொண்டிருந்தான் அண்ணன்...

நாளைக்கும்,
இட்டிலி யென்றால்
என்னை விட்டுவிடு,
பட்டினியாய்க் கூடப்
பள்ளிக்கூடம் போகிறேன்,
எட்டிப்பார்த்துவிட்டு
எரிந்துவிழுந்தாள் அக்கா...

ஒற்றைத் தலைவலி
உலுக்கியெடுத்தாலும்
தலையில்
கட்டுப்போட்டுக்கொண்டு
கருமமே கண்ணாயிருந்தாள் அம்மா...

கிட்டப்போய் அருகிருந்து
நெற்றியை வருடிவிட்டு,
சற்றுநேரம் படு அம்மா
சரியாப்போயிடும் என்றேன்,
கட்டிக்கொண்டாள் என்னை...

என் சட்டையை நனைத்தது
அவள் கண்ணீராயிருக்குமோ???

-சுந்தரா

கருத்துகள்

  1. நான் இப்படி இருக்கலையேன்னு வெக்கமா இருக்குது..

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவோ சொல்லிட்டீங்க இதுக்குள்ள... தலைப்புக்கு ஏற்றமாதிரியே... ‘ஒற்றை மனுஷியும் கற்றை கஷ்டங்களும்’னும் வைச்சிக்கலாம்...

    பதிலளிநீக்கு
  3. //ஹுஸைனம்மா said...

    நான் இப்படி இருக்கலையேன்னு வெக்கமா இருக்குது..//

    இதெல்லாம் நாம அம்மா ஆனப்புறம்தான் புரியுது ஹுசைனம்மா.

    பதிலளிநீக்கு
  4. //க.பாலாசி said...

    எவ்வளவோ சொல்லிட்டீங்க இதுக்குள்ள... தலைப்புக்கு ஏற்றமாதிரியே... ‘ஒற்றை மனுஷியும் கற்றை கஷ்டங்களும்’னும் வைச்சிக்கலாம்...//

    அதுவும் சரிதான் :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி!

    பதிலளிநீக்கு
  5. அடடா ரெண்டு வாத்தைத்தலைப்பில் வைத்திவிடுகிற பெரிய பொருள். வீட்டை அப்படியே அச்சு அசலாக பிடித்துக்கட்டுகிற காமிரா எழுத்துக்கள். எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பேசப்படவேண்டிய பெண் மனம் பொதிகிறது தங்கச்சி. அழகும்மா.

    பதிலளிநீக்கு
  6. ஆண் மகன்

    ஒவ்வொரு வார்த்தை இடையிலும்
    தேடினேன் என் அம்மாவை (அன்பு)

    பதிலளிநீக்கு
  7. //காமராஜ் said...

    அடடா ரெண்டு வாத்தைத்தலைப்பில் வைத்திவிடுகிற பெரிய பொருள். வீட்டை அப்படியே அச்சு அசலாக பிடித்துக்கட்டுகிற காமிரா எழுத்துக்கள். எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பேசப்படவேண்டிய பெண் மனம் பொதிகிறது தங்கச்சி. அழகும்மா.//

    நன்றிகள் அண்ணா :)

    பதிலளிநீக்கு
  8. //வேங்கை said...

    ஆண் மகன்

    ஒவ்வொரு வார்த்தை இடையிலும்
    தேடினேன் என் அம்மாவை (அன்பு)//

    இப்படித்தான்,அம்மாவின் அன்பு அனைவரையும் நெகிழவைத்துவிடுகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வேங்கை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!