பெண்மையின் மென்மையில் இல்லை பலவீனம்!

அலுவலகப் பணிமுடித்து 
ஆறுமணிக்கு வந்தாலும், 
ஆறுதலாய் உட்கார 
அவளுக்கு விதியில்லை... 

குளிக்கின்ற சமயத்தில் 
குழாயடியில் நீர்பிடித்து, 
சமைக்கிற தருணத்தில் 
சமையலறை சுத்தம்செய்வாள்... 

படிக்கவைக்கும் நேரத்தில் 
பத்திரிகை பார்த்துவிட்டு, 
மாவரைக்கும் நேரத்தில் 
மடித்ததுணி எடுத்துவைப்பாள்... 

நடைப்பயிற்சி என்றுசொல்லிக் 
கடைக்கெல்லாம் போய்வந்து, 
கணக்கெழுதும் நேரத்தில் 
கவிதையொன்றும் எழுதிவைப்பாள்... 

அடுத்த நாள் சமையலுக்கு 
ஆயத்தம் செய்தபடி, 
படிக்கின்ற பிள்ளைக்கு 
உணவூட்டி உறங்கவைப்பாள்... 

படுத்தபின்னும் உறக்கமின்றிப் 
பால்கணக்கு என்னவென்று, 
மனக்கணக்குப் போட்டு 
அதை 
மறக்காமல் குறித்துவைப்பாள்... 
 
சுற்றுகிற பூமிபோலப் 
பொறுமையுடன் பணிமுடித்துச், 
சுற்றிவரும் பெண்ணிவளைப் 
போற்றிட முடியாமல், 

பெட்டைக் கோழிகூவி 
பொழுதொன்றும் விடியாதென்று 
நக்கலாய்ப் பேசி 
நையாண்டி செய்துவிட்டு, 

கணினித் திரையினுள் 
கண்புதைத்துக் கொண்ட 
கணவனைப் பார்த்தவள் 
தனக்குள்ளே முணுமுணுத்தாள்... 

பெண்மையின் மென்மையில் 
இல்லை பலவீனம், 
அது, 
ஆணென்னும் அகங்காரத்தில் 
அடங்கிக் கிடக்கிறதென்று! 

******

கருத்துகள்

  1. மிகவும் அருமை சுந்தரா!
    இறுதி வரிகள் சூப்பர் பன்ச்!!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான வரிகளால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை

    பதிலளிநீக்கு
  3. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஆணாதிக்க கொடுமைகளை.நல்லாருக்கு சுந்தரா.

    பதிலளிநீக்கு
  4. ஆணாதிக்க அப்பாவிற்கும்
    அடங்கியே போய்விட்ட அம்மாவிற்கும் தப்பாமல்
    பிறந்து விட்டோம்
    தவறென்றே தெரியாமல்
    வளர்ந்து விட்டோம்
    அன்பாலே திருத்திடுவீர்
    நண்பராகி நல்லவராய்
    நலமுடனே வாழ்ந்திடுவோம்
    அடுத்த தலைமுறை
    அன்புடனே அறிவுடனே
    நண்பர்களாய் வாழ்ந்திடுவார்
    நம்மைப் பார்த்து !

    பதிலளிநீக்கு
  5. //SVenkat said...

    மிகவும் அருமை சுந்தரா!
    இறுதி வரிகள் சூப்பர் பன்ச்!!!//

    வாங்க வெங்கட்...நலமா?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //தியாவின் பேனா said...

    அருமையான வரிகளால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை//

    வாங்க தியா, மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. //காமராஜ் said...

    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.இந்த ஆணாதிக்க கொடுமைகளை.நல்லாருக்கு சுந்தரா.//

    நன்றிகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  8. //Thamizhan said...

    ஆணாதிக்க அப்பாவிற்கும்
    அடங்கியே போய்விட்ட அம்மாவிற்கும் தப்பாமல்
    பிறந்து விட்டோம்
    தவறென்றே தெரியாமல்
    வளர்ந்து விட்டோம்
    அன்பாலே திருத்திடுவீர்//

    :)

    //நண்பராகி நல்லவராய்
    நலமுடனே வாழ்ந்திடுவோம்
    அடுத்த தலைமுறை
    அன்புடனே அறிவுடனே
    நண்பர்களாய் வாழ்ந்திடுவார்
    நம்மைப் பார்த்து !//

    நிஜம்தான் தமிழன். நம்மைப் பார்த்துத்தான் அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டும்.ஆனால், இப்பவே ஓரளவு மாற்றம் தெரியத்தான் செய்கிறது.

    முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பெண் ஆதிக்கம் பற்றியும் கவிதை பாடுங்கள்!!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!