Thursday, October 14, 2010

ஒரு அமீரகத்துத் தமிழனின் அழுகுரல்!

இது என்னுடைய கவிதை அல்ல...அமீரகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரர் எழுதியதாக, நான் மின்னஞ்சலில் படித்த கவிதை. இதில்வரும் அபஷி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்கலாம்.

இதோ, கவிதை...

நாம் யார்?

வளமையான
வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!

வறுமை என்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள்!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்
சூறாவளியில் சிக்கிய
திசை மாறிய பறவைகள்

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம் கொடுக்கும்
அபாக்கிய சாலிகள்

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும்
தொடர் கதைகள்!

கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர் வாதிகள்!

நலம் நலமறிய
ஆவல் என்றால்
பணம் பணமறிய
ஆவல் என கேட்கும்
ஏ . டி . எம் . மெஷின்கள்!

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறி கொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!

ஏ . சி . காற்றில்
இருந்துக் கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள்!

வளரும் பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல் நெஞ்சக்காரர்கள்!

தனிமையிலே
உறங்கும் முன்
தன்னையறியாமலே
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள்!

அபஷி என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள்!

உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும்
நோயாளிகள்!

கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!

பெற்ற தாய்க்கும்
வளர்த்த தந்தைக்கும்
கட்டிய மனைவிக்கும்
பெற்றெடுத்த குழந்தைக்கும்
உற்ற குடும்பத்திற்கும்

உண்மை நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும்
தியாகிகள்!

15 மறுமொழிகள்:

அன்னு said...

'ஹபஷி' என்ற சொல் பொதுவாக கருப்பினத்தவரை சேரும். அதாவது ஆப்பிரிக்க / சோமாலிய / சூடானிய...இவர்களை. இந்த மக்கள் அவர்களின் நிறத்திற்காகவும், வயிற்ருப்பிழைப்புக்காகவும் எல்லாவித கீழ்மட்ட வேலைகளும் செய்கிறார்கள் / செய்யவைக்கப்படுகிறார்கள்....இவர்களையே இங்கு ஒப்பிட்டுள்ளார் உங்கள் நண்பன்...சோகமே வடைவான கவிதை....என்ன செய்ய....அங்கு மட்டுமில்லை...எல்லா வெளினாடுகளிலும் இப்படியோர் அவலநிலை சில மக்களுக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது...:(

அம்பிகா said...

வருமானத்துக்காக, அயல்நாடு செல்வோரின் வலி, வரிக்கு வரி வெளிப்படுகிறது.

Jaleela Kamal said...

இது முற்றீலும் உண்மையே

Jaleela Kamal said...

அவரின் அழுகுரலில் அனைத்து தமிழனும் வலிகள் தெரிகிறது,

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்....வாழ்த்துகள்

naveen (தமிழமிழ்தம்) said...

என் வாழ்கையையும் குத்தி காட்டியது. நன்று. ரசித்தேன்.

asiya omar said...

உணர்வுள்ள பகிர்வுக்கு நன்றி.

காமராஜ் said...

பிரிவெனும் துயர் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் இருந்து பெருமூச்சு விடுகிறது.

சுந்தரா said...

//அன்னு said...

'ஹபஷி' என்ற சொல் பொதுவாக கருப்பினத்தவரை சேரும். அதாவது ஆப்பிரிக்க / சோமாலிய / சூடானிய...இவர்களை. இந்த மக்கள் அவர்களின் நிறத்திற்காகவும், வயிற்ருப்பிழைப்புக்காகவும் எல்லாவித கீழ்மட்ட வேலைகளும் செய்கிறார்கள் / செய்யவைக்கப்படுகிறார்கள்....இவர்களையே இங்கு ஒப்பிட்டுள்ளார் உங்கள் நண்பன்...சோகமே வடைவான கவிதை....என்ன செய்ய....அங்கு மட்டுமில்லை...எல்லா வெளினாடுகளிலும் இப்படியோர் அவலநிலை சில மக்களுக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது...:(//

வாங்க அன்னு...

வருகைக்கும் சிறப்பான விளக்கத்துக்கும் நன்றி!

சுந்தரா said...

//அம்பிகா said...

வருமானத்துக்காக, அயல்நாடு செல்வோரின் வலி, வரிக்கு வரி வெளிப்படுகிறது.//

நன்றி அம்பிகா!

சுந்தரா said...

//Jaleela Kamal said...

அவரின் அழுகுரலில் அனைத்து தமிழனும் வலிகள் தெரிகிறது,//

நிஜம்தான் ஜலீலா, நன்றி!

சுந்தரா said...

//தியாவின் பேனா said...

வாழ்த்துகள்....வாழ்த்துகள்//

நன்றி தியா!

சுந்தரா said...

//naveen (தமிழமிழ்தம்) said...

என் வாழ்கையையும் குத்தி காட்டியது. நன்று. ரசித்தேன்.//

:(

வாங்க நவீன்...நன்றி!

சுந்தரா said...

//asiya omar said...

உணர்வுள்ள பகிர்வுக்கு நன்றி.//

வாங்க ஆசியா, நன்றி!

சுந்தரா said...

//காமராஜ் said...

பிரிவெனும் துயர் ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் இருந்து பெருமூச்சு விடுகிறது.//

நிஜம்தான் அண்ணா...

நன்றிகள்!

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails