ஈசலுக்கும் இரங்கும்!



உதிர்த்துப் போட்ட
சிறகுகளுக்கு மத்தியில்
உருண்டு கொண்டிருந்தது ஈசல்...

வீடெல்லாம் குப்பையாக்கிட்டு
விழுந்துகிடக்குது பார்...
என்று,
விளக்குமாறை எடுத்துவந்து
வீடுகூட்டப்போனாள்  அம்மா...

அதுவே,
அம்மாகிட்ட போகமுடியலேன்னு
அழுதுகிட்டிருக்கு,
நீ  சும்மாயிரு அம்மா...
கன்னத்தில் கைவைத்துக்
கவலையுடன் சொன்னது குழந்தை...

கருத்துகள்

  1. குழந்தைகள் உலகம் தனி..குழந்தை மனம் வேண்டும் சில பொழுதாவது ..
    நல்லா இருக்குங்க சுந்தரா

    பதிலளிநீக்கு
  2. தலைப்பும் கவிதையும் அருமை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  3. அஹ்ஹா....
    கவிதை என்ன அழகு சுந்தரா,
    குழந்தை மனம் ஒரு நாளைக்கு
    ஒரு பத்து நிமிஷமாவது கிடைக்கனும்.
    நல்லா இருக்கு தங்கச்சி.

    பதிலளிநீக்கு
  4. கள்ளமில்லாப் பிள்ளைமனம் அமைந்துவிட்டால் ஈசலென்னா..? நாட்டில் ஊசலாடும் பல உயிர்களும் பிழைத்துக் கொள்ளும் :) கவிதை அருமை அக்கா

    பதிலளிநீக்கு
  5. //பத்மா said...

    குழந்தைகள் உலகம் தனி..குழந்தை மனம் வேண்டும் சில பொழுதாவது ..
    நல்லா இருக்குங்க சுந்தரா//

    வாங்க பத்மா, நன்றி!

    பதிலளிநீக்கு
  6. //ராமலக்ஷ்மி said...

    தலைப்பும் கவிதையும் அருமை சுந்தரா.//

    வாங்கக்கா, நன்றி!

    பதிலளிநீக்கு
  7. a wonderfully constructed piece of work. good approach. thanks for your beautiful renderence. (activeX suddenly not working, sorry for not commenting in thamizh)

    பதிலளிநீக்கு
  8. //மதுரை சரவணன் said...

    super.//

    நன்றிகள் ஆசிரியரே!

    பதிலளிநீக்கு
  9. //காமராஜ் said...

    அஹ்ஹா....
    கவிதை என்ன அழகு சுந்தரா,
    குழந்தை மனம் ஒரு நாளைக்கு
    ஒரு பத்து நிமிஷமாவது கிடைக்கனும்.
    நல்லா இருக்கு தங்கச்சி.//

    நன்றிகள் அண்ணா :)

    பதிலளிநீக்கு
  10. //பாலன் said...

    கள்ளமில்லாப் பிள்ளைமனம் அமைந்துவிட்டால் ஈசலென்னா..? நாட்டில் ஊசலாடும் பல உயிர்களும் பிழைத்துக் கொள்ளும் :) கவிதை அருமை அக்கா//

    வாங்க பாலன் தம்பி :)

    நலமா? வருகைக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. //naveen (தமிழமிழ்தம்) said...

    a wonderfully constructed piece of work. good approach. thanks for your beautiful renderence. (activeX suddenly not working, sorry for not commenting in thamizh)//

    மிக்க நன்றி நவீன்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!