பாரபட்சம்


அன்று,
அழைத்த திரௌபதிக்கு
ஆடைகொடுத்துக் காத்தவன்,

இன்று,
அழைப்பதறியாமல்
அனாதையாய்த் திரியும்,
அந்த
ஊமைக் கோமளத்துக்கும்
கொஞ்சம்
உவந்து கொடுத்திருக்கலாம்...

அங்காடித் தெருக்களில்
ஆள்துளைக்கும் பார்வைகளில்,
அன்றாடம்,
தொட்டும் தொடாமலும்
கெட்டுப்போகிறாள் அவள்...

கருத்துகள்

  1. \\அங்காடித் தெருக்களில்
    ஆள்துளைக்கும் பார்வைகளில்\\
    :-((

    பதிலளிநீக்கு
  2. சுருக்கென்று தைக்கிறது அநாதரவாக்கப்பட்டவர்களைக்கடக்கிற வலி.

    பதிலளிநீக்கு
  3. //அம்பிகா said...

    \\அங்காடித் தெருக்களில்
    ஆள்துளைக்கும் பார்வைகளில்\\
    :-((//

    வாங்க அம்பிகா...நன்றி!

    பதிலளிநீக்கு
  4. செவிட்டில் அறையும் உண்மைகள்

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய் பு

    பதிலளிநீக்கு
  5. கவிதை 'நச்'சுன்னு வந்திருக்கு. யதார்த்தத்தின் அவலம் நன்றாக வெளிப்பட்டுள்ளது. இன்னும் தொடர்க. :)

    பதிலளிநீக்கு
  6. ஆடைகொடுத்துக் காத்தவன்,

    இன்று,
    அழைப்பதறியாமல்
    அனாதையாய்த் திரியும்,
    அந்த
    ஊமைக் கோமளத்துக்கும்
    கொஞ்சம்
    உவந்து கொடுத்திருக்கலாம்...
    //

    அவள் ஊமை போலவே அவன் மனச்செவிடாகிவிட்டான் போலும் :(

    பதிலளிநீக்கு
  7. naveen (தமிழமிழ்தம்) said...

    nenjai thodum unarvu. intha pozhuthil udai koduka ninaikum ovvoruvarum kadavulae.

    வாங்க நவீன்...உண்மைதான்,நன்றி!

    naveen (தமிழமிழ்தம்) said...

    //Can you teach me how to write beautiful thamizh like you do?//

    சித்திரமும் கைப்பழக்கம்ன்னு ஒரு பழமொழி தெரிஞ்சிருக்குமே உங்களுக்கு?

    பதிலளிநீக்கு
  8. //V.Radhakrishnan said...

    அருமை அக்கா.//

    வாங்க ரங்கன், நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அங்காடித் தெருக்களில்
    ஆள்துளைக்கும் பார்வைகளில்,
    அன்றாடம்,
    தொட்டும் தொடாமலும்
    கெட்டுப்போகிறாள் அவள்.////

    இந்த வரிகள் சொல்கிறது அங்காடித் தெருக்களில் நடப்பவை

    பதிலளிநீக்கு
  10. //காமராஜ் said...

    சுருக்கென்று தைக்கிறது அநாதரவாக்கப்பட்டவர்களைக்கடக்கிற வலி.//

    :( நன்றிகள் அண்ணா!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!