ஃபைவ் ஸ்டார்!!!

"அப்பா,
மிச்சம் காசிருந்தா
மூணு ஃபைவ் ஸ்டார்..."

கத்திச்சொல்லிவிட்டுக்
கதவுக்குப்பின்னால்
ஒளிந்துகொண்டது கடைக்குட்டி...

சட்டைப்பை காலியாயிருக்க,
கடனுக்கு அரிசிவாங்கக்
கடைக்குப் புறப்பட்டவன்,

"அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார்,
அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்...
அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க,
அப்புறம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?"

என்று,
இடக்காய்க் கேட்டுவிட்டுத்
திரும்பாமல் நடந்தான்...

சுருங்கிய பிஞ்சின்
முகத்தைப் பார்க்காமலும்,
அரும்பிய கண்ணீரை
அடுத்தவர்க்குக் காட்டாமலும்...

கருத்துகள்

  1. "அப்பா,
    மிச்சம் காசிருந்தா
    மூணு ஃபைவ் ஸ்டார்..."

    கத்திச்சொல்லிவிட்டுக்
    கதவுக்குப்பின்னால்
    ஒளிந்துகொண்டது கடைக்குட்டி...


    //


    இது பரவாயில்லை
    என் பொண்ணு மிச்சம் இருக்கோ இல்லையோ
    வாங்கியே ஆகணும் என்பாள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதைக்குக் காரணமானது, கஷ்டப்பட்ட வீட்டுப்பிள்ளை தியா...

    பதிலளிநீக்கு
  3. வறுமை கொடிது, அதைவிட கொடியது அதை பிள்ளைகளிடம் மறைக்க முயன்று தோற்பது... நல்ல கவிதை சுந்தராக்கா.

    பதிலளிநீக்கு
  4. கண்ணீர் துளிகள் கண்ணை மறைக்கிறது

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. //"அம்மாவும் நானும் ரெண்டு ஸ்டார்,
    அம்முவும் அண்ணன்களும் மூணு ஸ்டார்...
    அஞ்சு ஸ்டார் வீட்டிலே இருக்க,
    அப்புறம் எதுக்கு
    இன்னும் கொஞ்சம் ஃபைவ் ஸ்டார்?"
    //


    வறுமையோடு நக்கலும் கூடவே பிறந்திருக்கிறது தகப்பனுக்கு!

    பதிலளிநீக்கு
  6. கலங்க வைத்த கவிதை...


    இதுவரை படிக்கவில்லை... எப்படியாவது வாங்கிவிடுகிறேன்... முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. இந்த வறுமையும் அன்பும் இணைபிரியாத்தோழர்கள்.

    பதிலளிநீக்கு
  8. //அன்னு said...

    வறுமை கொடிது, அதைவிட கொடியது அதை பிள்ளைகளிடம் மறைக்க முயன்று தோற்பது... நல்ல கவிதை சுந்தராக்கா.//

    வாங்க தங்கச்சி, நிஜம்தான்.

    பதிலளிநீக்கு
  9. //விஜய் said...

    கண்ணீர் துளிகள் கண்ணை மறைக்கிறது

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    வாங்க விஜய், நன்றி!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பைவ் ஸ்டார் மனதைத் தொட்டது..
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!