ஒற்றை மரம்!

                     
 

விழுதிருந்தா ஆலமரம்,
கன்றிருந்தா வாழைமரம்,
பாளையிருந்தா பனைமரம்,
தோகையிருந்தா தென்னைமரம்...

இது
எதுவுமே இல்லாம இருந்தா...?

பக்கத்திலிருந்த ஆயாவிடம்,
பாடத்தில்
சந்தேகம் கேட்டது குழந்தை...

"வாழ்ந்துகெட்ட தனிமரம்"

விரக்தியாய்ச் சொல்லிவிட்டு,
விழிகளைத் துடைத்துக்கொண்டது,
வீடுகூட்டி வயிற்றைக் கழுவுகிற
அறுபது வயசு ஆயா...

********

கருத்துகள்

  1. ’வாழ்ந்து கெட்ட தனிமரம்’!! பலமரங்கள் இப்படி ஊரில் உண்டு!! பகீர்னு இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. வலி சொல்லும் கவிதை நன்று சுந்தரா.

    பதிலளிநீக்கு
  3. டெம்ப்ளேடில் மாற்றங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. சுப்ஹானல்லாஹ்.... நூற்றுக்கு நூறு உண்மை. மனதை பிழிகிற உண்மையை நாசூக்கா ரெண்டு வரில சொல்லிட்டீங்கக்கா. :(

    பதிலளிநீக்கு
  5. //"வாழ்ந்துகெட்ட தனிமரம்"//

    :(

    கவிதையோடு படமும் வருத்தத்தை பகிர்கின்றது!

    பதிலளிநீக்கு
  6. சினிமாப் பாடல்களில் எத்தனையோ பட்டியல் கவிதை கேட்டுப் புளித்து போய்விட்டது. ஆனாலும் இந்தப் பட்டியல் சுரீரென்று தைக்கிறது.கவிதையின் முழு உலுக்கலையும் கடைசி வரி தாங்கிக்கொள்கிறது .அபாரம் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  7. பா.ரா கவிதைபோல் நெஞ்சை தைக்கிறது

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை சகோ!

    பதிலளிநீக்கு
  9. படமும் கவிதையும் நெஞ்சை நிறைக்கிறது........

    பதிலளிநீக்கு
  10. //ஹுஸைனம்மா said...

    ’வாழ்ந்து கெட்ட தனிமரம்’!! பலமரங்கள் இப்படி ஊரில் உண்டு!! பகீர்னு இருக்கு.//

    இது அந்த பாதிப்புதான் ஹுசைனம்மா...நன்றி!

    பதிலளிநீக்கு
  11. //ராமலக்ஷ்மி said...

    வலி சொல்லும் கவிதை நன்று சுந்தரா.//

    நன்றி அக்கா!

    //டெம்ப்ளேடில் மாற்றங்கள் அருமை.//

    எல்லாம் ப்ளாகரோட கைங்கர்யம்தான் அக்கா :)

    பதிலளிநீக்கு
  12. //அன்னு said...

    சுப்ஹானல்லாஹ்.... நூற்றுக்கு நூறு உண்மை. மனதை பிழிகிற உண்மையை நாசூக்கா ரெண்டு வரில சொல்லிட்டீங்கக்கா. :(//

    வாங்க தங்கச்சி :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. //ப்ரியமுடன் வசந்த் said...

    //"வாழ்ந்துகெட்ட தனிமரம்"//

    :(

    கவிதையோடு படமும் வருத்தத்தை பகிர்கின்றது!//

    வாங்க வசந்த், நன்றி!

    உண்மையைச் சொல்லணும்னா, அந்தம்மா கண்ணீரைத் துடச்சுக்கல, சல்யூட் அடிக்குதாம் :)

    பதிலளிநீக்கு
  14. //காமராஜ் said...

    சினிமாப் பாடல்களில் எத்தனையோ பட்டியல் கவிதை கேட்டுப் புளித்து போய்விட்டது. ஆனாலும் இந்தப் பட்டியல் சுரீரென்று தைக்கிறது.கவிதையின் முழு உலுக்கலையும் கடைசி வரி தாங்கிக்கொள்கிறது .அபாரம் சுந்தரா.//

    நன்றி அண்ணா.

    உங்க வார்த்தைகளால் கிடைக்கும் உற்சாகம் ரொம்ப அதிகம் :)

    பதிலளிநீக்கு
  15. //விஜய் said...

    பா.ரா கவிதைபோல் நெஞ்சை தைக்கிறது

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் விஜய் :)

    பதிலளிநீக்கு
  16. //"வாழ்ந்துகெட்ட தனிமரம்"//
    மனம் கவலை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  17. //Balaji saravana said...

    கவிதை அருமை சகோ!//

    வாங்க தம்பி, நன்றி!

    பதிலளிநீக்கு
  18. //Kousalya said...

    நல்லா இருக்கு..//

    வருகைக்கு நன்றிகள் கௌசல்யா!

    பதிலளிநீக்கு
  19. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

    படமும் கவிதையும் நெஞ்சை நிறைக்கிறது........//

    வாங்க நித்திலம்...நன்றி!

    பதிலளிநீக்கு
  20. //மாதேவி said...

    //"வாழ்ந்துகெட்ட தனிமரம்"//
    மனம் கவலை கொள்கிறது.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மாதேவி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!