தீபாவளி வேட்டு!



கோட்டுப்போட்ட கிறுக்கனொருத்தன்
கத்தியோட அலையிறானாம்,
வீட்டைவிட்டுப் பிள்ளைகளை
வெளிய அனுப்பாதே...

போனஸ் பணம்கேட்டு
போராட்டத்துக்குக் கிளம்பியவன்,
ஜாடையாய்க் கூப்பிட்டு,
சத்தமாய்ச்சொன்னான் மனைவியிடம்...

கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள்
கிலியோடு முகம்பார்க்க,
கதவைப்
பூட்டியவள் மெல்லமாய்
மனசுக்குள் முணுமுணுத்தாள்...

வீட்டுச் சுவற்றுக்குள்
அடைஞ்சு கிடந்தாலும்,
வேட்டும் விமரிசையும்
காதில்
விழாமலா இருக்குமென்று...

கருத்துகள்

  1. ஏழையின் வீட்டில் என்று பணம் உள்ளதோ அன்றுதான் தீபாவளி

    பதிலளிநீக்கு
  2. //LK said...

    ஏழையின் வீட்டில் என்று பணம் உள்ளதோ அன்றுதான் தீபாவளி//

    நிஜம்தான் கார்த்திக்,நன்றி!

    பதிலளிநீக்கு
  3. //வல்லிசிம்ஹன் said...

    :(((((//

    வாங்க வல்லிம்மா, நன்றி!

    பதிலளிநீக்கு
  4. :(

    வலிகளை வார்த்தைகளால் அடைக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. :((
    ... ஒவ்வொரு பண்டிகையும் சில வீட்டில் மட்டும் தீபத்திற்கு பதிலாக வயிற்றை எரிய வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!