அடர்கருப்பு



இது,
வெளிச்சத்தின் வாசல்,
காதலின் தேடல்,
இரவுகளின் இயல்பு,
கனவுகளின் பிறப்பு...


உயிர்களின் துயிலணை,
பனியிறங்கும் பஞ்சணை,
ஆழ்கடலின் ஆழம்,
நிழலினிலும் நீளும்...


நீர்சுமந்த மேகங்கள்
அணிந்திருக்கும் வண்ணம்,
யாருமிலாத் தனியிரவில்
பயமுறுத்தும் எண்ணம்...


மழைகுளித்த பனைமரங்கள்
காட்டுகிற நிறம்,
சுடர் விளக்கின்ஒளியினிலும்
ஒளிந்திருக்கும் நிஜம்...


கருப்பென்ற வார்த்தை
அந்தக்
கண்ணனுக்கும் பொருந்தும்,
உலகத்து நிறங்களெல்லாம்
அடர்கருப்பில் அடங்கும்!

கருத்துகள்

  1. //கருப்பென்ற வார்த்தை
    அந்தக்
    கண்ணனுக்கும் பொருந்தும்,
    உலகத்து நிறங்களெல்லாம்
    அடர்கருப்பில் அடங்கும்!//

    கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு.... அழகான வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. அடர் கருப்புக்கு இப்படி ஒரு விளக்கமா? அருமை சகோ..

    பதிலளிநீக்கு
  3. //Balaji saravana said...

    அடர் கருப்புக்கு இப்படி ஒரு விளக்கமா? அருமை சகோ..//

    வாங்க சரவணன் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  4. காலரை தூக்கி விட்டுக்கலாம் நானும் கருப்புதான்னு

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  5. - அடர் கருப்பு -

    ரொம்ப நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்ணே,

    கருப்புதான் உங்களுக்கும் புடிச்ச கலராண்ணே!

    என்னையப்பத்தி இவ்வளவு உயர்வா ஒரு கவிதை போட்டிருக்கீங்களே, அதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //மழைகுளித்த பனைமரங்கள்
    காட்டுகிற நிறம்,
    சுடர் விளக்கின்ஒளியினிலும்
    ஒளிந்திருக்கும் நிஜம்...//

    எப்படி இப்படியெல்லாம்..?
    என்னமோ போங்க..உங்க மாதிரி ஆளுங்க கவிதைகளை படிச்சா நமக்கும் எழுதணும்னுதான் தோணுது...ஆனா யாரும் படிக்கணுமே..!!

    பதிலளிநீக்கு
  8. //விஜய் said...
    காலரை தூக்கி விட்டுக்கலாம் நானும் கருப்புதான்னு

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    :) நன்றிகள் விஜய்!

    பதிலளிநீக்கு
  9. //கமலேஷ் said...
    - அடர் கருப்பு -

    ரொம்ப நல்லா இருக்குங்க...//

    நன்றி கமலேஷ்!

    பதிலளிநீக்கு
  10. //சத்ரியன் said...
    வணக்கம்ணே,

    கருப்புதான் உங்களுக்கும் புடிச்ச கலராண்ணே!

    என்னையப்பத்தி இவ்வளவு உயர்வா ஒரு கவிதை போட்டிருக்கீங்களே, அதுக்கு நன்றி. //

    வாங்க சத்ரியன் :)

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. //அன்பரசன் said...
    அருமை.//

    முதல் வருகைக்கு நன்றி அன்பரசன்!

    பதிலளிநீக்கு
  12. //அன்னு said...
    //மழைகுளித்த பனைமரங்கள்
    காட்டுகிற நிறம்,
    சுடர் விளக்கின்ஒளியினிலும்
    ஒளிந்திருக்கும் நிஜம்...//

    எப்படி இப்படியெல்லாம்..?
    என்னமோ போங்க..உங்க மாதிரி ஆளுங்க கவிதைகளை படிச்சா நமக்கும் எழுதணும்னுதான் தோணுது...ஆனா யாரும் படிக்கணுமே..!!//

    உடனே எழுதுங்க தங்கச்சி, படிக்க நான் இருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!