முடியாத துயரம்


இவை,
எல்லாம் கடந்துபோகும்,
இயல்பாயிரு  என்றார்கள்...

இருந்து பார்த்தாள்,
இயலவில்லை...

ஆடுகிற மாட்டை ஆடியும்
பாடுகிற மாட்டைப் பாடியும்
படியவைக்கலா மென்றார்கள்...

முயன்று பார்த்தாள்,
முடியவில்லை...

வேதனையாயிருந்தால்
கொஞ்சம்  விலகியிரு...
விலக விலகத்தான்
விருப்பம் வருமென்றார்கள்...

விலகியும் பார்த்தாள்,
ஆனால்,
வெறுப்பைத் தவிர
வேறெதுவும் வரவில்லை...

இறுதியில்
விட்டு விலகி
வெளியில் வந்தபின்தான்
விபரம் புரிந்தது,

அது
வெந்த புண்ணில் 
வேலைப் பாய்ச்சுகிற
சொந்தம் மட்டுமல்ல,

எட்டியிருந்தாலும் குத்திக்கிழிக்கிற
எந்திரமும் தானென்று!!!

கருத்துகள்

  1. விழுங்கவும் முடியாத, துப்பவும் முடியாத ஒரு பழம் :-)))

    பதிலளிநீக்கு
  2. ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை.

    பதிலளிநீக்கு
  3. //அமைதிச்சாரல் said...
    விழுங்கவும் முடியாத, துப்பவும் முடியாத ஒரு பழம் :-)))//

    வாங்க சாரல்,நன்றி!

    பதிலளிநீக்கு
  4. // Chitra said...
    ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. //

    வாங்க சித்ரா நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //THOPPITHOPPI said...
    வரிகள் அருமை //

    நன்றி தொப்பி தொப்பி!

    பதிலளிநீக்கு
  6. //வெந்த புண்ணில்
    வேலைப் பாய்ச்சுகிற
    சொந்தம் மட்டுமல்ல,//

    ஆழமான,அர்த்தமுள்ள கவிதை..

    பதிலளிநீக்கு
  7. வேறு தலைப்பு கொடுத்திருந்தால் கடைசி வரி அதிர்ச்சி கொடுப்பதாக இருந்திருக்கும் என தோணுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!