விக்கியதில் கசிந்த விவகாரங்கள்!


                                               

இப்போதெல்லாம்,
அக்கம்பக்கத்தில் பேசக்கூட
அச்சப்படுகிறார்களாம் சிலர்...

ஏனென்றால்,
''விக்கி'யதில் வெளியான
விவகாரங்கள் அப்படி...

கட்டிப்பிடித்துக் கொண்டே
கழுத்தறுத்த யுக்திகள்,
கைகுலுக்கிக் கூட்டிச்சென்று
கழுவேற்றிய புத்திகள்...

அத்தனையும் வெளியில்வர
அதிர்ந்துபோயிருக்கின்றன,
அரசியல் அரங்கத்தின்
அசகாய சக்திகள்!

அண்ணனுக்கும் ஆப்பு
அவனுக்குக் குடைபிடித்த
அடுத்தவனுக்கும் ஆப்பு...

இங்கே,
கண்ணின் விழிபிதுங்கக்
கலங்கிப்போய்நிற்கிறது கயமை...

அரசியலின் போர்வையில்
அக்கிரமம் செய்தவர்களின்
ரகசியங்களெல்லாம்
விக்கியதில் வெளியேற,

விக்கியவனின் வாயைத்
தைக்கும்  முயற்சியில்
மும்முரமாய் இறங்கியிருக்கின்றன,
ஆத்திரம் தலைக்கேறிய
சில
ஆதிக்க முதலைகள்!

கருத்துகள்

  1. வாங்க வளர்மதி!

    முதல் வருகைன்னு நினைக்கிறேன்,நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

    வாழ்த்துக்கள்.....//

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் உலவு!

    பதிலளிநீக்கு
  3. //அண்ணனுக்கும் ஆப்பு
    அவனுக்குக் குடைபிடித்த
    அடுத்தவனுக்கும் ஆப்பு...//

    இதுதான் அப்பு டாப்பு...!

    பதிலளிநீக்கு
  4. //விக்கியவனின் வாயைத்
    தைக்கும் முயற்சியில்
    மும்முரமாய் இறங்கியிருக்கின்றன,
    ஆத்திரம் தலைக்கேறிய
    சில ஆதிக்க முதலைகள்
    //
    ரொம்பக் கஷ்டம் தான் சகோ. கொஞ்சம் இந்த இணைப்பையும் பாருங்க
    http://vandhemadharam.blogspot.com/2010/12/729.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!