ஈரம்






ஈரவாசனை படர்ந்திருந்தது
அந்தக் கூரைக் குடிசையின்
எல்லாப் பக்கமும்...

கோரைப்பாயும் ஈரக்கோணியும்
அதனதன் பங்குக்கு
வாசனை பரப்ப,

அரிசிப் பானைக்குள்
அடிவரைக்கும் துழாவி,
உரசிக் கிடைத்த
ஒன்றிரண்டு மணிகளை,

வாசல் குருவியின்
வயிற்றுக்குக் கொடுத்துவிட்டு,
ஈரச் சட்டையுடன்
சோகைப்பிள்ளை சிரிக்க,

உள்ளே,
மூத்திர   ஈரத்தில் அழுதது,
சேலைத் தொட்டிலில்
சின்னப் பிள்ளை...

மாசம் முடியுமுன்னால்
முன்பணம் கேக்குதா?
நாசமாய்ப் போச்சுதென்று
ஓசைஉயர்த்திய எஜமானியிடம்,

ஈரத்தால் வெளுத்த
இருகையும் பிசைந்தபடி,
வாரேம்மா என்றபடி,
வெளியிறங்கி நடந்தவளின்

வீட்டுக்குள் அன்றைக்குக்
காய்ந்து கிடந்தது,
ஓரத்து விறகடுப்பும்,
ஒன்றிரண்டு வயிறுகளும்...

**********

படம் : இணையத்திலிருந்து


கருத்துகள்

  1. கவிதை மிகவும் அருமை
    தொடருங்கள் ..

    பதிலளிநீக்கு
  2. ஈரமில்லா நெஞ்சுகளால் வற்றிப்போன வறுமை

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    பதிலளிநீக்கு
  3. அருமையான எழுத்தோட்டம் ...
    நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வறுமையின் தாண்டவம் வரிகளின் வழியே!
    நல்லாயிருக்கு சகோ!

    பதிலளிநீக்கு
  5. //ஈரத்தால் வெளுத்த
    இருகையும் பிசைந்தபடி,
    //

    எங்கள் மனதையும் பிசைந்து விட்டது கவிதை.

    பதிலளிநீக்கு
  6. //Meena said...

    கவிதை மிகவும் அருமை
    தொடருங்கள் ..//
    வாங்க மீனா, உங்க முதல் வருகைக்கு என் வரவேற்புகளும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  7. //விஜய் said...

    ஈரமில்லா நெஞ்சுகளால் வற்றிப்போன வறுமை

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்//

    வாங்க சகோ, மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //அரசன் said...

    அருமையான எழுத்தோட்டம் ...
    நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அரசன்!

    பதிலளிநீக்கு
  9. //Balaji saravana said...

    வறுமையின் தாண்டவம் வரிகளின் வழியே!
    நல்லாயிருக்கு சகோ!//

    வாங்க சரவணன், நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //ராமலக்ஷ்மி said...

    //ஈரத்தால் வெளுத்த
    இருகையும் பிசைந்தபடி,
    //

    எங்கள் மனதையும் பிசைந்து விட்டது கவிதை.//

    வாங்கக்கா, நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஏழ்மையை மிக நன்றாக, ஆழமாகப் படம் பிடித்து காட்டுகிறது உங்கள் கவிதை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!