Saturday, January 29, 2011

கடலும், கடல்சார்ந்த கொலைகளும்!



கரைவரைக்கும் நம்நாடு
கரைகடந்தால் யார் நாடு?
கேள்விக்குப் பதிலின்றிக் 
குமுறிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்....

யாருடைய உயிர்போனால்
எனக்கென்ன வந்ததென்று,
பல்லிடையில் மாட்டிக்கொண்ட
முள்ளெடுத்துக் கொண்டிருக்கிறது
மையமும் மாநிலமும்...

இருந்தாலோ ஆயிரங்கள்
செத்தாலோ லட்சமென்று
உயிர் விலைபேசி
ஊர்வாயை அடைத்துவிட்டு,

அயிரைமீன் குழம்புவைத்து
அடுத்தவேளை  சோறுதின்று,
அகலவாய் திறந்து 
ஏப்பமிடுகிறது அரசியல்...

முதலைவாயில் நுழையக்கூடப்
பயப்படாத வீரவர்க்கம்
கவலைவாயில் நுழைந்ததாலே
கலங்கிப்போய் நிற்கக்கண்டு,

கொல்லப் பணங்கொடுத்த
கூற்றுவப் பிறவிகளிடம்,
நல்லதோர் நியாயம்கேட்டு
நாதியற்று நிற்கிறது தமிழினம்...

இனிமேல்,
வெல்லுவோம் விதியையென்று
வீறுகொண் டெழுந்துவிட்டால்
மெல்லப் பகைமைசாயும்
வீரமே, விழித்தெழு நீ!





13 மறுமொழிகள்:

திகழ் said...

உண்மை

ராமலக்ஷ்மி said...

அவசியமான கவிதை சுந்தரா. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

valarmathi said...

கடல்மேல் பிறக்கவைத்தான்
மீனவர்களை கண்ணீரில் மிதக்கவைத்தான்...

ஹேமா said...

அநியாயங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க எங்கோ ஓரிடத்தில் வெடித்துப் பீறிடத்தானே வேணும்.காத்திருப்போம் !

SVenkat said...

அருமை அருமை சுந்தரா!!! நீண்ட நாட்களுக்குப்பின்னர் வந்தாலும், நல்முத்து கிடைத்தது!!!!

ஸாதிகா said...

அருமை சகோதரி.கவிதை வரிகளில் உங்கள் உணர்வுகளை அழகாய் கொட்டி இருக்கின்றீர்கள்.

பாரத்... பாரதி... said...

கேள்விகளோடு வலியை, கவிதையாய் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்.

சுந்தரா said...

நன்றி திகழ் :)

நன்றி அக்கா!

நன்றி வளர்மதி!

சுந்தரா said...

நன்றிகள் ஹேமா, முதல் வருகைக்கும்!

நன்றி வெங்கட், மிக்க மகிழ்ச்சி!

சுந்தரா said...

நன்றிகள் சகோதரி ஸாதிகா!

நன்றிகள் பாரதீ :)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை சுந்தரா.. ஒன்று பட்டு குரல் கொடுப்போம்.

சி. கருணாகரசு said...

உணர்வு கவிதைக்கு பாராட்டுக்கள்

சுந்தரா said...

நன்றிகள் தேனம்மை!

நன்றிகள் கருணாகரசு!

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails