Tuesday, February 8, 2011

காந்திதேசம் வருகிறதாம்!



தென்னை மட்டையும்
துணிசுற்றிய பந்துமாக
என்னைப் பார்த்துவிட்டால்
எரிந்துவிழுவாள் அம்மா...

மட்டை விளையாட்டில்
கெட்டிக்கார னாவான்,
திட்டாதே அவனையென்று
கட்டிக்கொள்ளுவார் அப்பா...

சிக்சர் அடிக்கிறேனென்று
சிதறடித்த பானையின்
சுக்கலாகிய துண்டுகள்போல்
சிதைந்துபோனது வாழ்க்கை...

கட்சிகளுக் கிடையே
நடந்த களேபரத்தில்
வெட்டிச் சாய்க்கப்பட்டார்
வேடிக்கைபார்த்த அப்பா...
அதைக்
கிட்டநின்று பார்த்ததினால்
சித்தம் கலங்கிப்போனாள் அம்மா...

இன்று,
மட்டைக்குப் பதிலாக
மண்வெட்டி யெடுத்தபடி,
ஒற்றைவேளை உணவுக்காக
ஓடாய்த் தேய்கிறேன்...

அங்கேயோ,
காந்திதேசம் வருகுதென்று
வாந்தியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்!



*சுந்தரா*

தேர்தல் வரும்போது யோசிச்சிட்டு ஓட்டுப்போடணும்... அது அங்கே!
எப்ப வந்தாலும் வாசிச்சிட்டு ஓட்டுப்போடலாம்... அது இங்கே :)

6 மறுமொழிகள்:

ராமலக்ஷ்மி said...

மிக உருக்கமான கவிதை, தந்தது வருத்தம்:(!

// அது அங்கே! இது இங்கே !//

ஆயிற்று!!

கே. ஆர்.விஜயன் said...

கொஞ்சம் மனதை வருத்திய கவிதை. கலக்குங்க.

Chitra said...

மனதை கனக்க வைத்த நிஜங்கள்.

சுந்தரா said...

//ராமலக்ஷ்மி said...

மிக உருக்கமான கவிதை, தந்தது வருத்தம்:(!

// அது அங்கே! இது இங்கே !//

ஆயிற்று!!//

நன்றிகள் அக்கா.

// அது அங்கே! இது இங்கே !//

அக்கா, இது சும்மா,விளையாட்டுக்கு :)

சுந்தரா said...

//கே. ஆர்.விஜயன் said...

கொஞ்சம் மனதை வருத்திய கவிதை. கலக்குங்க.//

வாங்க விஜயன், நன்றி!

சுந்தரா said...

//Chitra said...

மனதை கனக்க வைத்த நிஜங்கள்.//

வாங்க சித்ரா, நன்றி!

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails