தீக்குளித்த சீதை,
மூக்கிழந்த சூர்ப்பனகை,
அருந்ததி, கண்ணகி,
அகலிகை,மாதவியென்று
எல்லாப் பெண்களிடத்திலும்
ஏதோ ஒரு விசும்பல்...
சதவீதத்தைக் கூட்டினாலும்,
சக மனுஷியாய்ப்
பார்க்கமறுக்கிற சமூகத்தில்,
முள்சுமக்கும் மல்லிகாவும்
முன்னேறிய மஞ்சுளாவும்
ஏதோ ஒரு புள்ளியில்,
பெண்ணாகப் பிறந்துவிட்ட
தன் விதியை நொந்தபடி...
7 மறுமொழிகள்:
:-(
>>>முள்சுமக்கும் மல்லிகாவும்
முன்னேறிய மஞ்சுளாவும்
ஏதோ ஒரு புள்ளியில்,
what an imajination...!!!
\\ஏதோ ஒரு புள்ளியில்,
பெண்ணாகப் பிறந்துவிட்ட
தன் விதியை நொந்தபடி\\
ஹூம்ம்ம்.... இதுதான் நிஜம்.
அப்போ மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா என்று சொன்னது???????
சதவீதத்தைக் கூட்டினாலும்,
சக மனுஷியாய்ப்
பார்க்கமறுக்கிற சமூகத்தில்,
முள்சுமக்கும் மல்லிகாவும்
முன்னேறிய மஞ்சுளாவும்
ஏதோ ஒரு புள்ளியில்,
பெண்ணாகப் பிறந்துவிட்ட
தன் விதியை நொந்தபடி...
வலி உண்டாக்குகிற இந்திய
கண்டுபிடிப்பு இது.
சுந்தரா கவிதையின்
அபாரமான இடம் இந்த வரிகள்
வாழ்த்துக்கள் சகோதரி.
பெண்ணின் வலிகள்! :(
nach kavithai, valiyai unarthum varigal. :(
Post a Comment
என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)