விசும்பல்!

தீக்குளித்த சீதை,
மூக்கிழந்த சூர்ப்பனகை,
அருந்ததி, கண்ணகி,
அகலிகை,மாதவியென்று
எல்லாப் பெண்களிடத்திலும்
ஏதோ ஒரு விசும்பல்...

சதவீதத்தைக் கூட்டினாலும்,
சக மனுஷியாய்ப்
பார்க்க மறுக்கிற சமூகத்தில்,

முள்சுமக்கும் மல்லிகாவும்
முன்னேறிய மஞ்சுளாவும்
ஏதோ ஒரு புள்ளியில்,
பெண்ணாகப் பிறந்துவிட்ட
தன் விதியை நொந்தபடி...

******

கருத்துகள்

  1. >>>முள்சுமக்கும் மல்லிகாவும்
    முன்னேறிய மஞ்சுளாவும்
    ஏதோ ஒரு புள்ளியில்,

    what an imajination...!!!

    பதிலளிநீக்கு
  2. \\ஏதோ ஒரு புள்ளியில்,
    பெண்ணாகப் பிறந்துவிட்ட
    தன் விதியை நொந்தபடி\\
    ஹூம்ம்ம்.... இதுதான் நிஜம்.

    பதிலளிநீக்கு
  3. அப்போ மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா என்று சொன்னது???????

    பதிலளிநீக்கு
  4. சதவீதத்தைக் கூட்டினாலும்,
    சக மனுஷியாய்ப்
    பார்க்கமறுக்கிற சமூகத்தில்,

    முள்சுமக்கும் மல்லிகாவும்
    முன்னேறிய மஞ்சுளாவும்
    ஏதோ ஒரு புள்ளியில்,
    பெண்ணாகப் பிறந்துவிட்ட
    தன் விதியை நொந்தபடி...

    வலி உண்டாக்குகிற இந்திய
    கண்டுபிடிப்பு இது.
    சுந்தரா கவிதையின்
    அபாரமான இடம் இந்த வரிகள்

    வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. பெண்ணின் வலிகள்! :(

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!