கலப்பதிகாரம்!

 

படபடக்கிற மனசு
பார்வையின் கோணங்கள் புதுசு
சிறைப்படத் துடிக்கிற தவிப்பு
சின்னச்சின்னதாய்ச் சிலிர்ப்பு...

கண்கள் நிறையக் கனவு
காலம் மறந்த நினைவு
எழுதஎழுதக் கவிதை
எல்லாப்பக்கமும் இனிமை...

சும்மாயிருந்த மனசில்
நீ தென்றலாய்த்தான் கலந்தாய்,
ஆனாலும்,
எழுந்ததென்னவோ
ஏகப்பட்ட அதிர்வலைகள்...

பார்க்கும் போதெல்லாம்
பிரியத்தின் துளிகளை
வீசிவிட்டுச் செல்கிறாய்...

அவையெல்லாம்
என்
முற்றத்துத் தோட்டத்தின்
முல்லைக்கொடியினில்,
மொட்டுக்களும் பூக்களுமாய்
மலர்ந்து கிடக்கின்றன...

அதைக்
கோர்த்துக் கொடுத்திட
வார்த்தைகளைத் தேடித்தேடி,
செம்மொழியின் எல்லைகளைச்
சுற்றிவந்து தோற்றபின்னர்,

வாய்திறந்து சொல்லிவிட்டால்
வார்த்தைகள் சிதறுமோவென்று,
காகிதத்தில் கோர்த்துக்
கடிதமாய் அனுப்பிவைத்தேன்...

அதைச்
சத்தமிட்டு வாசித்தால்
காற்றுக்கும் காதல்வந்து
உன்னை முத்தமிடக்கூடுமடி...

அதனால்
பூக்களோடு அனுப்பியுள்ள
பொத்திவைத்த காதலைப்
பார்வையால்மட்டும் படி!

விடையினையும்,
உன் விழிகளால்மட்டும் சொல்!

***

கருத்துகள்

  1. டைட்டிலே செம!

    //சத்தமிட்டு வாசித்தால்
    காற்றுக்கும் காதல்வந்து
    உன்னை முத்தமிடக்கூடுமடி... //
    ரசனை :)

    பதிலளிநீக்கு
  2. அழகான வார்த்தைகளால் கோர்த்த கவிதை. மிக நன்று சுந்தரா.

    //வாய்திறந்து சொல்லிவிட்டால்
    வார்த்தைகள் சிதறுமோவென்று,
    காகிதத்தில் கோர்த்துக்
    கடிதமாய் அனுப்பிவைத்தேன்...//

    அருமை.

    பதிலளிநீக்கு
  3. //அவையெல்லாம்
    என்
    முற்றத்துத் தோட்டத்தின்
    முல்லைக்கொடியினில்,
    மொட்டுக்களும் பூக்களுமாய்
    மலர்ந்து கிடக்கின்றன...//

    அபாரம் சுந்தரா..
    இங்கே
    கவிதையும் காதலும்
    சேர்ந்து மணக்கிறது

    பதிலளிநீக்கு
  4. //Balaji saravana said...

    டைட்டிலே செம!

    //சத்தமிட்டு வாசித்தால்
    காற்றுக்கும் காதல்வந்து
    உன்னை முத்தமிடக்கூடுமடி... //
    ரசனை :)//

    வாங்க சரவணன் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //ராமலக்ஷ்மி said...

    அழகான வார்த்தைகளால் கோர்த்த கவிதை. மிக நன்று சுந்தரா.

    //வாய்திறந்து சொல்லிவிட்டால்
    வார்த்தைகள் சிதறுமோவென்று,
    காகிதத்தில் கோர்த்துக்
    கடிதமாய் அனுப்பிவைத்தேன்...//

    அருமை.//

    நன்றிகள் அக்கா :)

    பதிலளிநீக்கு
  6. //காமராஜ் said...

    //அவையெல்லாம்
    என்
    முற்றத்துத் தோட்டத்தின்
    முல்லைக்கொடியினில்,
    மொட்டுக்களும் பூக்களுமாய்
    மலர்ந்து கிடக்கின்றன...//

    அபாரம் சுந்தரா..
    இங்கே
    கவிதையும் காதலும்
    சேர்ந்து மணக்கிறது//

    நன்றிகள் அண்ணா :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!