ஒரு கவிஞனின் கதை



வார்த்தைகளுக்கிடையே சிக்கிய
வாழ்க்கையின் துயரமும்
எழுத்துகளுக்கிடையே சிக்கிய
ஏழ்மையின் வலிகளும்
வரிகளுக்கிடையே சிக்கிய
பிரிந்துபோன உறவுகளும்
அவனைக் கவிஞன் என்று
ஊருக்கு அடையாளம்காட்ட,

காலியாய்க் கிடந்த
சமையலறைப் பாத்திரங்களையும்
மூளியாய்க் கிடந்த
முகத்தையும் கழுத்தையும் காட்டி,
காசுக்குப்பெறாத மனுஷனென்று
கணவனை
அடையாளம்காட்டினாள் அவள்...

வாழ்க்கையில் தொலைத்ததை
வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில்
அவன் வாழ்ந்துகொண்டிருக்க,
வார்த்தைகளைக் கண்டெடுத்து
அவனை 
வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்!

****

கருத்துகள்

  1. வாழ்க்கையில் தொலைத்ததை
    வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில்
    அவன் வாழ்ந்துகொண்டிருக்க,
    வார்த்தைகளைக் கண்டெடுத்து
    அவனை
    வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்\\
    யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  3. யதார்த்தமும் கவிதையும் ஒன்றாகிறது உங்களிடம்.

    பதிலளிநீக்கு
  4. பிரிக்க முடியாதது-வறுமையும்,புலமையும்--ஒரு திரைப்பட வசனம்.
    அதை யதார்த்தமாக வெளிப்படுத்தும் அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  5. வாழ்க்கையில் தொலைத்ததை
    வார்த்தைகளில் பிடித்த மகிழ்ச்சியில்
    அவன் வாழ்ந்துகொண்டிருக்க,
    வார்த்தைகளைக் கண்டெடுத்து
    அவனை
    வருத்துவதே வாழ்க்கையென்றிருந்தாள் அவள்!



    ....மிகவும் நேர்த்தியாக வார்த்தைகளை கோர்த்து, அதில் அர்த்தம் சேர்த்து.... அசத்திட்டீங்க....

    பதிலளிநீக்கு
  6. அருமையான வார்த்தை பிரயோகங்கள்... நன்று...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!