இளமையில் கல் என்று
எழுத்துக்கூட்டிப் படிக்கும்போதே,
வறுமையெனும் கல் விழுந்து
வழிமாறிப்போனது வாழ்க்கை...
கல்லை நகர்த்த
முயற்சித்துத் தோற்றுப்போக,
கல்விதான் நகர்ந்துபோச்சு
கைகளுக்கு எட்டாமல்...
இன்றைக்கு,
அடுக்கிக் கல்சுமந்தால்
அடுத்தவேளை சோறு,
அதிலும்,
வளர்த்திக் குறைவென்று
சம்பளமும் 'வேறு'...
ம்...ஒன்றுஒன்றாய்க் கூட்டி
நாலுவரிசை வந்தாச்சு...
இனி,
இன்னும் சிலவரிசை
ஏற்றிப் பூசிவிட்டால்,
நாங்களும் தூண்கள்தான்

14 மறுமொழிகள்:
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
இதுதான் நமது எதிர்காலமும்,இதுதான் நமது தூண்களும்.என்ன செய்ய எத்தனை திட்டங்கள் தீட்டினால் செயல் கூர்மழுங்கிப்போகிற தேசம் இது.
நாளைய தூண்கள் நல்லபடியா வளரட்டும்.. கவிதை அருமை சுந்தரா.
என்னதான் சட்டங்கள் வந்தாலும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இயலவில்லை
கீற்றில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!
ஏழ்மை எளிதான எழுத்தில்..
அருமை கவிதை அருமை...
சிறப்பான வரிகள்...
வாழ்த்துக்கள் :)
மொத்தக் கவிதையும் வாசித்து விட்டு வாய் அடைத்துப் போனேன்.
கடைசி வரி சவுக்கடி
//மதுரை சரவணன் said...
கவிதை அருமை. வாழ்த்துக்கள்//
நன்றிகள் சரவணன்!
//காமராஜ் said...
இதுதான் நமது எதிர்காலமும்,இதுதான் நமது தூண்களும்.என்ன செய்ய எத்தனை திட்டங்கள் தீட்டினால் செயல் கூர்மழுங்கிப்போகிற தேசம் இது.//
நன்றிகள் அண்ணா!
//அமைதிச்சாரல் said...
நாளைய தூண்கள் நல்லபடியா வளரட்டும்.. கவிதை அருமை சுந்தரா.//
நன்றிகள் சாரல்!
நன்றிகள் கார்த்திக்!
நன்றிகள் சித்ரா!
நன்றிகள் கருன்!
நன்றி மாணவன்!
நன்றிகள் திகழ் :)
மிக அருமையான கவிதை,
கீற்றி ல் வெளியானதற்கு வாழ்த்துகக்ள்
சுந்தரா அங்கு போய் பார்க்கலாமுன்னு போன யார் சமையல் குறீப்பெல்லாம் அனுப்பிறாஙக்,
என் ஆம்பூர் மட்டன் பிரியானியும் இருக்கு
கொஞ்ச நாளை ஒரு முறை இவனுஙகளுக்கு திருடுவதே புழப்பா போச்சு
Post a Comment
என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)