பெற்ற மனசு


கல்லூரி விடுதிக்குப்போன
கடைக்குட்டியின் முகம்
கண்ணிலேயே நிற்க,
காசுதேற்றும் மும்முரத்தில்
கீரை விற்றுக்கொண்டிருந்தாள் அவள்...

இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும்
இல்லாதவர்கள் எலும்பையும் வாங்கிப்போக,
ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது
அந்த ஏழைத்தாயின் மனசு...

எண்ணிப்பார்த்த சில்லறை
இளக்காரமாய்ச் சிரிக்கையில்,
கல்லூரிக்குப் போகிற
கடைசி பஸ்ஸும் கடந்துபோய்விட,

இடுப்புச் சேலையில்
ஏக்கத்தையும் முடிந்தபடி,
வாடிய கீரையோடு
வீட்டுக்குப் புறப்பட்டாள்...

ஆனால்,
அவளை விட்டுச்
சாலையிலேயே நின்றது
சங்கடத்துடன் மனசு.
***

கருத்துகள்

  1. அருமையான கவிதைங்க... படிக்கும்போதே மனசு ஏதோ செய்யுது. நன்றி...

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையா கீர காரம்மாவின் ஏக்கத்தையும் மனசை வெளிபடுத்தி இருக்கீங்க

    பதிலளிநீக்கு
  3. இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும்
    இல்லாதவர்கள் எலும்பையும் வாங்க,
    ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது
    அந்த ஏழைத்தாயின் மனசு...


    .....இருப்பவர்கள் - இல்லாதவர்கள் - ஏக்கங்கள் என்று, ஒரு சில வரிகளில் எதார்த்தம் அள்ளி தெளித்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் கருன்!

    நன்றிகள் ஜலீலா!

    நன்றிகள் சித்ரா!

    பதிலளிநீக்கு
  5. //இடுப்புச் சேலையில்
    ஏக்கத்தையும் முடிந்தபடி//

    ஏழைத்தாயின் மனசு...

    பதிலளிநீக்கு
  6. எதார்த்த கவிதை...

    தாய் என்பவள்
    சந்தோசத்தை விட
    சங்கடங்களை அதிகம் கொண்டவள்...
    ஆனால்... பிள்ளையின் சந்தோசத்தை அதிகம் கொண்டவள்.

    பதிலளிநீக்கு
  7. கனமான வரிகளி, மெலிதான அந்த தாயைப்பற்றி.. :(

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!