Thursday, February 24, 2011

கூண்டுக்கிளிகளும் குடும்பநல விதிகளும்!


பிடித்தமாதிரி நடந்துக்கோ
பிரியமாய்ப் பேசு
கழுத்தளவு கவலையென்றாலும்
கண்ணில் அதைக் காட்டாதே...

ஆளப்பிறந்தவன் அவன்
பேணப் பிறந்தவள் நீ
காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்
கல்லானாலும் கணவன்...

விதவிதமாய் உடுத்திக்கொள்
வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு
வயிற்றின் வாயிலாக
அவன் மனசுக்குள் நுழையப்பார்...

ஆணென்றால் அவன் கொஞ்சம்
அப்படி இப்படித்தான் இருப்பான்,
கட்டிய கணவனையும்
குழந்தைபோல நினைத்துக்கொள்...

சிரித்த முகமென்றால் சீதேவி
சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி
பொறுமையின் சிகரமென்றால் பூதேவி
பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...

கல்யாணம் பேசியதிலிருந்து
கணக்கில்லாத அறிவுரைகள்;
எல்லாவற்றையும் கேட்டவள்
இறுதியாய்ச் சொன்னாள்...

வழிவழியாய்ச் சொல்லுகிற
விதிகளெல்லாம் கடைப்பிடிக்க
வானத்திலிருந்து யாரும்
வரனாக வருவதில்லை...

பயத்தோடு பார்ப்பதற்கும்
பக்குவமாய் நடிப்பதற்கும்
அவன் தலைவன் மட்டுமல்ல,
நன்றும் தீதும்
பகிர்ந்துகொள்ளப் போகும்
நண்பனும்கூடத்தான்...

அதனால்
பெண்மையின் விதிகளை
என்னிடம் சொன்னதுபோல
ஆண்மைக்கும் சொல்லுங்கள்,
அதை
அனுப்பிவைக்கிறேனென்று!

*****


14 மறுமொழிகள்:

Vinoth said...

அப்படியெல்லாம் சொல்ல முடியாது..

Chitra said...

அதானே.... அவங்க மட்டும் எஸ்கேப் ஆகணுமா?

நிலாமதி said...

வேண்டும் பல பெண்கள் உங் களைப் போல ...பாராட்டுக்கள்.

காமராஜ் said...

வார்த்தைகள் உன்னிடத்தில் என்னாமாய் வசியப்பட்டுக்கிடக்கின்றன.செதுக்கி செதுக்கி அளவுஎடுத்து சேர்த்துவைக்கிற எழுத்து.
அதுவும் சொல்லவந்ததை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி.

//சிரித்த முகமென்றால் சீதேவி
சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி
பொறுமையின் சிகரமென்றால் பூதேவி
பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...//

ராமலக்ஷ்மி said...

அதானே சுந்தரா:)? நல்லாச் சொன்னீங்க!

சந்தம் மிக அருமை.

அன்னு said...

நச்சுன்னு முடிச்சிட்டீங்க...??? செம!!

வேடந்தாங்கல் - கருன் said...

அருமையான கவிதை...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

அமைதிச்சாரல் said...

அப்படிப்போடுங்க.. அசத்தலான கவிதை :-))))))

asiya omar said...

அருமை.அருமை.அருமை...

திகழ் said...

அருமை

சுந்தரா said...

//Vinoth said...

அப்படியெல்லாம் சொல்ல முடியாது..//

பின்னே, எப்படிச் சொல்றது??? :)

முதல்வருகைக்கு நன்றி!

சுந்தரா said...

நன்றி சித்ரா!

நன்றிகள் நிலாமதி!

சுந்தரா said...

//காமராஜ் said...

வார்த்தைகள் உன்னிடத்தில் என்னாமாய் வசியப்பட்டுக்கிடக்கின்றன.செதுக்கி செதுக்கி அளவுஎடுத்து சேர்த்துவைக்கிற எழுத்து.
அதுவும் சொல்லவந்ததை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி.

//சிரித்த முகமென்றால் சீதேவி
சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி
பொறுமையின் சிகரமென்றால் பூதேவி
பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...//

நன்றிகள் அண்ணா...

வருகைக்கு மிக்க நன்றி!

சுந்தரா said...

//ராமலக்ஷ்மி said...

அதானே சுந்தரா:)? நல்லாச் சொன்னீங்க!

சந்தம் மிக அருமை//

நன்றிகள் அக்கா :)

//அன்னு said...

நச்சுன்னு முடிச்சிட்டீங்க...??? செம!!//

வாங்க அன்னு, நன்றி!

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails