உறவு வேலிகளும் உள்ளே சில பெண்களும்!



வந்த காலோடு
வீட்டுக்குக் கிளம்புறியே,
இருந்து ஒருவாய்
சாப்பிட்டுப்போ அண்ணே...

உரக்கச்சொல்ல நினைத்ததை
உள்வாங்கிக்கொண்டு,
முறைப்புக்கு அஞ்சி
முனகலாய் வெளிவந்தது குரல்...

மறுக்கத் தோன்றாமல்
அவளை
மறுபடியும் பார்த்தான் அண்ணன்...

இருக்கிற போதெல்லாம்
கொடுத்துப் பழக்கியவன்,
இல்லையென்று சொன்னபோது
செல்லாக் காசாய்த் தெரிய,
பிறந்தவீட்டு உறவெல்லாம்
போதுமென்றானது...

நெருக்கமான உறவில்
நூறுபேர் இருந்தாலும்,
பொருத்தமானவன் இவனென்று
பேசி முடித்தவனை,
இன்றைக்கு
உபசரிக்கக் கூடாதென்று
உத்தரவும் போட்டது...

மறைத்துக்கொண்ட முகத்தை
மறந்தும் விலக்காமல்,
பத்திரிகைக்குள் புதைந்திருந்த
பாசக்கார மாப்பிள்ளையிடம்,

பத்திரமாய்த் தங்கையைப்
பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு,
வைத்துவிட்டுப் போனான்
அண்ணன்
அழைப்பிதழ் ஒன்றை...

உள்ளே,
நல்வரவை விரும்புபவள்
அவளாக இருந்தாள்,
அவள் உறவே
அங்கு மறுக்கப்பட்ட பட்சத்தில்...

கருத்துகள்

  1. அருமையாக உள்ளது உங்கள் வார்த்தை பிரயோகம்..இந்த கவிதைப்போலவே...

    பதிலளிநீக்கு
  2. உடனடி பதிலுக்கு நன்றிகள் கருன்!

    பதிலளிநீக்கு
  3. ச்சான்சே இல்லை.. அசத்திட்டீங்க சுந்தரா.

    பதிலளிநீக்கு
  4. நன்றிகள் குறிஞ்சி!

    நன்றிகள் சாரல்!

    பதிலளிநீக்கு
  5. சில உறவுகள் திருமணத்திற்கு பிறகு பிரிந்து விடுவது மிக சோகம்! மிக அருமையான உணர்வுகளின் வரிகள் சகோ!

    பதிலளிநீக்கு
  6. காட்சி கண் முன் விரிகிறது சுந்தரா. மிக நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  7. மனதை கனக்க வைக்கும் கவிதைங்க... எத்தனையோ பெண்கள் இப்படி சூழ்நிலை கைதிகளாக இருப்பது தெரியும் போது கோபமும் வருத்தமும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. //மனதை கனக்க வைக்கும் கவிதைங்க... எத்தனையோ பெண்கள் இப்படி சூழ்நிலை கைதிகளாக இருப்பது தெரியும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. //

    அதே!! :(

    பதிலளிநீக்கு
  9. //Balaji saravana said...

    சில உறவுகள் திருமணத்திற்கு பிறகு பிரிந்து விடுவது மிக சோகம்! மிக அருமையான உணர்வுகளின் வரிகள் சகோ!//

    பல பெண்கள் இத்தகைய சோகத்தைத் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நன்றிகள் சரவணன்!

    பதிலளிநீக்கு
  10. //ராமலக்ஷ்மி said...

    காட்சி கண் முன் விரிகிறது சுந்தரா. மிக நெகிழ்வு.//

    நன்றிகள் அக்கா!

    பதிலளிநீக்கு
  11. //Chitra said...

    மனதை கனக்க வைக்கும் கவிதைங்க... எத்தனையோ பெண்கள் இப்படி சூழ்நிலை கைதிகளாக இருப்பது தெரியும் போது கோபமும் வருத்தமும் வருகிறது.//

    நிஜம்தான் சித்ரா...இருதலைக்கொள்ளி எறும்புகள்போல இருக்கிறார்கள் பலர்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. //அன்னு said...

    //மனதை கனக்க வைக்கும் கவிதைங்க... எத்தனையோ பெண்கள் இப்படி சூழ்நிலை கைதிகளாக இருப்பது தெரியும் போது கோபமும் வருத்தமும் வருகிறது. //

    அதே!! :(//

    நன்றிகள் அன்னு!

    பதிலளிநீக்கு
  13. //சென்னை பித்தன் said...

    அருமையான ,மனதைத்தொட்ட கவிதை!//

    நன்றிகள் ஐயா!

    பதிலளிநீக்கு
  14. சுந்தரா...பாசங்களைச் சுமப்பதால் பெண்கள் எப்போதும் சுமைதாங்கிகள்,இருப்பக்க இடிதாங்கிகள்தான் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!