'எங்ககூட விளையாடவேண்டாம்
உங்க பேச்சுக் காய்' என்று
பொம்மைகளைப் எடுத்துக்கொண்டு
பிரிந்து போனார்கள் இவர்கள்...
கொஞ்சநேரம் கழித்து
கூடிப் பேசிவிட்டு,
'பொம்மைகளைத் தராவிட்டால்
நாங்களும் காய்தான்...' என்று
அதிரடியாய் அறிவித்தார்கள் அவர்கள்...
நாளைக்கு நாமெல்லாம்
யார்கூட விளையாடுவதென்று
நாலைந்துபேர் சேர்ந்து
நல்லதுகெட்டதை அலசினார்கள்...
அடுத்தநாள் விளையாட்டை
ஆளுக்கொரு பக்கமாய் விளையாட,
தெருச் சிறுவர்கள் சிலரும்
'வரட்டுமா?' என்றார்கள்...
ஆனால்,
கருக்கலில் பார்த்தால்
கூடிக்கிடந்த பொம்மைகளுக்கு மத்தியில்
அவர்களைத் தோளோடு
இவர்கள் அணைத்தபடி,
காக்காய்கடி கடித்துக்
கள்ளமாங்காய்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...
உங்க பேச்சுக் காய்' என்று
பொம்மைகளைப் எடுத்துக்கொண்டு
பிரிந்து போனார்கள் இவர்கள்...
கொஞ்சநேரம் கழித்து
கூடிப் பேசிவிட்டு,
'பொம்மைகளைத் தராவிட்டால்
நாங்களும் காய்தான்...' என்று
அதிரடியாய் அறிவித்தார்கள் அவர்கள்...
நாளைக்கு நாமெல்லாம்
யார்கூட விளையாடுவதென்று
நாலைந்துபேர் சேர்ந்து
நல்லதுகெட்டதை அலசினார்கள்...
அடுத்தநாள் விளையாட்டை
ஆளுக்கொரு பக்கமாய் விளையாட,
தெருச் சிறுவர்கள் சிலரும்
'வரட்டுமா?' என்றார்கள்...
ஆனால்,
கருக்கலில் பார்த்தால்
கூடிக்கிடந்த பொம்மைகளுக்கு மத்தியில்
அவர்களைத் தோளோடு
இவர்கள் அணைத்தபடி,
காக்காய்கடி கடித்துக்
கள்ளமாங்காய்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...
இங்கே,என்னதான் நடக்கிறதென்று
அந்தக் குழந்தைகளிடம் கேட்டேன்...
இது,
அரசியல் விளையாட்டென்று சொல்லி
அதிர வைத்தார்கள்!

13 மறுமொழிகள்:
குழந்தையிலேயே அரசியல் விளையாட்டு .. வாழ்த்துக்கள் :)
குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கிறது இந்த கேடு கெட்ட அரசியல் பேரம்!
அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்.
நச் நச்...நறுக் நறுக்
\\காக்காய்கடி கடித்துக்
கள்ளமாங்காய்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்...\\
சூப்பர்.
நல்ல்ல்ல விளையாட்டு :-)))
குழந்தைகள் உலகமே தனித்ததுதான்.அழகுக் கவிதை குழந்தைகள் போலவே !
அட்டகாசம் சுந்தரா:)!
கவிதை சூப்பர்..
பழமான பிஞ்சுகள்.
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் சுதர்ஷன்!
நன்றிகள் சரவணன்!
நன்றிகள் கருன்!
நன்றிகள் பாசமலர்!
நன்றிகள் அம்பிகா!
நன்றிகள் அமைதிச்சாரல்!
நன்றிகள் ஹேமா!
நன்றிகள் அக்கா!
நன்றிகள் ஆசியா!
நன்றிகள் ஸ்ரீராம்! (முதல் வருகைக்கும் சேர்த்து)
Post a Comment
என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)