நானும், அப்பாபோல...



அப்பாபோல நானும் பெரியவனாகி...
என்று
அக்காவிடம் ஆரம்பித்தவன்,

அப்பாவைப் பார்த்ததும்
வார்த்தைகளை ஒளித்துக்கொண்டான்...


அருகழைத்துக் கேட்டார் அப்பா...

நீயும் அப்பா போல,


வாத்தியார் ஆவியா?
....

புல்லட் பைக் ஓட்டுவியா?

.....

வேஷ்டி சட்டை போட்டுப்பியா?
....

சொல்லுடா என் செல்லமகனே...

'அம்மாவை அடிச்சு
அழ வைக்கமாட்டேன் ' என்றபடி,
அழுதபடி நகர்ந்துபோனான் மகன்.

*****

**13/3/2011 அன்று" திண்ணையில் "வெளிவந்தது**

கருத்துகள்

  1. முடிவு எதிர்பார்க்காத ஒன்று.... வலி மிகுந்த எதார்த்தமான கவிதை... ஆகா...

    பதிலளிநீக்கு
  2. அருமை.
    பாராட்டுக்கள். படித்து முடித்தபின்னும் மனதின் ஓரத்தில் வலி இருந்துகொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. குதூகலிக்க வேண்டிய குழந்தைகள் குமுறலில்....ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  4. //அம்மாவை அடிச்சு
    அழ வைக்கமாட்டேன் //
    கையால அடிக்காம சொல்லால அடிச்சிருக்கான் அவங்கப்பாவை அவன்! :)

    பதிலளிநீக்கு
  5. //வேடந்தாங்கல் - கருன் said...

    முடிவு எதிர்பார்க்காத ஒன்று.... வலி மிகுந்த எதார்த்தமான கவிதை... ஆகா...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருன்!

    பதிலளிநீக்கு
  6. //புதுகைத் தென்றல் said...

    அருமை.
    பாராட்டுக்கள். படித்து முடித்தபின்னும் மனதின் ஓரத்தில் வலி இருந்துகொண்டு இருக்கிறது.//

    வாங்க புதுகைத் தென்றல் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பாச மலர் / Paasa Malar said...

    //குதூகலிக்க வேண்டிய குழந்தைகள் குமுறலில்...ம்ம்ம்//

    பிரச்சனையுள்ள குடும்பங்களில் மனசுக்குள்ளேயே குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் குழந்தைகள்.

    நன்றிகள் பாசமலர்!

    பதிலளிநீக்கு
  8. //Balaji saravana said...

    //அம்மாவை அடிச்சு
    அழ வைக்கமாட்டேன் //
    கையால அடிக்காம சொல்லால அடிச்சிருக்கான் அவங்கப்பாவை அவன்! :)//

    சரியா சொன்னீங்க சரவணன் :)

    நன்றி!

    பதிலளிநீக்கு
  9. பிஞ்சின் வலி வார்த்தைகளாய்.. கவிதை அருமை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  10. இதுதாங்க அடுத்த தலைமுறை...

    தன் அன்புக்குரியவர்கள் காயப்படுத்துவதை விரும்பாத, தன் அளவிலாவது மாற்ற விரும்புவது..

    பதிலளிநீக்கு
  11. ஒரு கவிதைக்கான சொல்லாடல்கள் ஏதுமின்றி மனசை எளிமையாக வருடுகிறது உங்கள் வரிகள். மிக ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  12. அருமையான பாடம் அந்த அப்பாவுக்கு, அதிர வைக்கும் வகையில்.

    நல்ல கவிதை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  13. பெற்றோர்களின் சண்டைகள் குழந்தைகளை எப்படிப் பாதிக்கின்றன!
    நன்று!

    பதிலளிநீக்கு
  14. அருமை அருமை.ஒரு குழந்தையின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது வரிகள்.
    வாழ்த்துகள் சுந்தரா !

    பதிலளிநீக்கு
  15. அந்த வயதின் குறைந்த பட்ச லட்சியம்...! அருமை.

    பதிலளிநீக்கு
  16. மிக மிக அருமை. வலி சொன்ன வார்த்தைகள் பிஞ்சு மனதின் எண்ணப் பகிர்வு

    பதிலளிநீக்கு
  17. sinna kavithaila evvalavu periya vishayathai easyaa sollitteenga. superkka )))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!