அடிக்கடி சுற்றிவந்த
அந்தக் குருவியைப் பார்த்து,
அடைக்கலங்குருவி கூடுகட்டினால்
அதிர்ஷ்டம் வருமென்று நினைத்து,
அபத்தமாய்ச் சந்தோஷப்பட்டாள் வீட்டுக்காரி...
ஆனால்,
அழிந்து கொண்டிருக்கிற
தன் இனத்திலொன்று
அங்கே
அடைபட்டிருக்கிறதாய் எண்ணி
அங்கே
அடைபட்டிருக்கிறதாய் எண்ணி
அலைந்துகொண்டிருந்தது குருவி...
சுற்றிச் சுற்றிவந்து
சத்தமிட்டுப் பார்த்தது,
செல்லக் குரலெழுப்பி
ஜாடையாகப் பேசியது...
சற்றும் பயனின்றிச்
சத்தமெல்லாம் விரயமாக,
ஒற்றைக் குருவியும்
செத்துப்போனது ஒருநாள்...
அங்கே
கத்திக் கொண்டிருந்தது,
செல்போன் குருவியென்ற
அர்த்தம் புரியாமலேயே...
செல்போன் குருவியென்ற
அர்த்தம் புரியாமலேயே...
******
** சிட்டுக்குருவியைத் தென்மாவட்டங்களில், அடைக்கலங்குருவியென்றும் அழைப்பார்கள்.**

10 மறுமொழிகள்:
குருவி:((!
நெகிழ்வு சுந்தரா.
சரியான நேரத்தில் வந்த கவிதை அருமை..
அருமையான கவிதை சுந்தரா..
சிட்டுக்குருவி இன்று இல்லாமல் போன காரனமே இந்த செல்ஃபோன்தான் என்று சொல்கிறார்கள். சிட்டுக் குருவிக்கு ஒரு நல்ல இரங்கற்பா!
\\கத்திக் கொண்டிருந்தது,
செல்போன் குருவியென்ற
அர்த்தம் புரியாமலேயே...\\
அருமையான கவிதை சுந்தரா
நிதர்சனம்
வாழ்த்துக்கள்
விஜய்
காலப்போக்கில மரங்கள்,காடுகள்,மலைகளைக்கூட போட்டோக்களிலதான் பார்க்கவேணுமோ என்னமோ !
மிகவும் அருமை ..........சுதந்திர பறவையின் குரலை சிறைவைத்த் பாவம்.
enna solla????????????/
ஐயோ என்றிருந்தது...நெகிழ்ச்சி
Post a Comment
என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)