பார்வையொன்றே போதும்!


நல்லபெண்கள்
நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை
அருகில் சென்று
உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம்
முகங்கனிந்து
பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ
பெண் மூச்சுக்
காற்றாலே உயிர்த்திடும் உலகம்...

நீ, 
நேற்றுவரை நிராகரித்த
காதல் பார்வைகளை
என் தோட்டத்தில் பதியனிட்டேன்...
அவையும்
நாற்றுகளாகி
நாலு இலை விட்டதோடு
தோற்றுப்போய் நிற்கின்றன...

அதற்காகவாவது
பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே,
பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்!


டிஸ்கி : உத்தமமான குணங்களையுடைய பெண்கள், பார்த்தால் தளிர்க்குமாம் மாமரம், நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை, அணைத்தால் தளிர்க்குமாம் மருதோன்றி, உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம், முத்தமிட்டால் தளிர்க்குமாம் மகிழமரம், இவைதவிர, நல்லதொரு பெண்ணின் நிழல்பட்டாலே தளிர்க்குமாம் சண்பகம். இது, சும்மா யாரும் பேச்சுக்கு சொன்னதில்லை. வில்லிப்புத்தூரார் தன் பாடலில் சொன்னது.

கருத்துகள்

  1. இலக்கிய பாடலை மையப்படுத்திய கவிதை..

    சூப்பர்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  3. இப்படியெல்லாம் பூக்குமா!!
    "பார்வையொன்றைப் பகிர்ந்திடு பெண்ணே,
    பாலையிலும் பூக்கள் பூக்கட்டும்!"
    இந்த வரிகள் அழகு.

    பதிலளிநீக்கு
  4. கவிதை வடிவில் புதிய தகவல் சுந்தரா.அருமை !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!