Friday, November 11, 2011

விடியாத வானம்

அதிகாலை இருளில்,
அவிகிற இட்டிலிகளோடு தொடங்கும்
அவளது அன்றாடப் பிழைப்பு...

தின்று முடித்துவிட்டுச்
சில்லறையைத் தேடுகிறவரும்
நின்று மெதுவாகக்
கடன்சொல்லக் காத்திருப்பவருமாக
என்றைக்குமே அங்கு
கூட்டத்துக்குக் குறைவிருக்காது...

கன்று தொலைவிருக்கக்
கட்டியிருக்கிற பசுவைப்போலக்
கண்கள் இரண்டும்
துணித்தொட்டிலை வருடிவர,
ஒன்றுக்குக்குப்போன குழந்தையின் ஈரம்
உட்கார்ந்து வேகிற
அவள் மனசை உறுத்தும்...

நின்று கதைபேசி,
ஒன்றுமில்லாததற்குச் சண்டையிட்டுப்
பண்டைய பெருமைகளைப்
பேசிப்பேசிக் காலந்தள்ளும்
ஒன்றுக்கும் உதவாத
உடையவனை நினைக்கையில்,
மென்று விழுங்கிய 
சோகம்வந்து விழிநிறைக்க,

வென்றுவிட வேண்டும்
வாழ்க்கையை என்கிற
என்றுமிருக்கிற 
ஏக்கம் மட்டும் மிச்சமாக,
தின்று தொலைக்கிற 
சுமைகளுக்கு மத்தியில்
என்றைக்குமே அவள் வானம்
விடியலை எதிர்பார்த்தபடி...

***

12 மறுமொழிகள்:

அமைதிச்சாரல் said...

//வென்றுவிட வேண்டும்
வாழ்க்கையை என்கிற
என்றுமிருக்கிற
ஏக்கம் மட்டும் மிச்சமாக,
தின்று தொலைக்கிற
சுமைகளுக்கு மத்தியில்
என்றைக்குமே அவள் வானம்
விடியலை எதிர்பார்த்தபடி...//

அசத்தல் வரிகள் சுந்தரா.. இப்படியொரு தன்னம்பிக்கையோடு இருப்பவள் நிச்சயமா வாழ்க்கையை வெல்வாள்.

சுந்தரா said...

நன்றிகள் சாரல் :)

Online Works For All said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

குடந்தை அன்புமணி said...

கவிதை மிகவும் நன்று. வாழ்த்துகள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//கன்று தொலைவிருக்கக்
கட்டியிருக்கிற பசுவைப்போலக்
கண்கள் இரண்டும்
துணித்தொட்டிலை வருடிவர,
ஒன்றுக்குக்குப்போன குழந்தையின் ஈரம்
உட்கார்ந்து வேகிற
அவள் மனசை உறுத்தும்...

///
அருமையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை சுந்தரா.

சத்ரியன் said...

//கன்று தொலைவிருக்கக்
கட்டியிருக்கிற பசுவைப்போலக்
கண்கள் இரண்டும்
துணித்தொட்டிலை வருடிவர,
ஒன்றுக்குக்குப்போன குழந்தையின் ஈரம்
உட்கார்ந்து வேகிற
அவள் மனசை உறுத்தும்...///

காட்சியினை மனக்கண்ணில் காட்டும் வரிகள். அனைத்துமே!

பாராட்டுக்கள்.

வென்றுவிட வேண்டும்
வாழ்க்கையை என்கிற
ஏக்கம் மட்டும் இருக்கும் வரையில்
சுழலும் இந்த உலகம்.

அப்பாதுரை said...

பிரமாதம்! பாராட்டுக்கள்!

அப்பாதுரை said...

//பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்கு சங்கீதமில்லை

சிறப்பான ஒரு வரிக் கவிதை.

ஹேமா said...

நல்லதொரு பெண்ணியம் சொல்லும் கவிதை.பெண்களின் வானம் ஓரளவு வெளிப்போடுதான் சுந்தரா.முதலில் துணிச்சல் வேண்டும்.பிறகு வெற்றிதான் !

சிவகுமாரன் said...

\\கன்று தொலைவிருக்கக்
கட்டியிருக்கிற பசுவைப்போலக்//

அருமையான உவமை .
அடுக்கிக் கொண்டே போகும் கவிதை மொழி அழகு.

Post a Comment

என்னுடைய வலைப்பக்கத்துக்கு வந்த உங்களுக்கு என் வரவேற்புகள்! வாசித்த இடுகைகளைப்பற்றி நீங்கள் சொல்லிச் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் கோடி பெறும்! :)

LinkWithin

Related Posts with Thumbnails