Tuesday, November 22, 2011

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்!


வெளிர்நீல வானத்தில்
வெள்ளிறகு மேகங்கள்,

வெய்யில் பூக்களோடு
விரிந்திருக்கும் தருநிழல்,

காற்றில் மிதந்துவந்து
கன்னம்தொடும் மழைத்துளி,

ஆற்றுநீர்ச் சுழிப்பில்
அலைக்கழியும் சருகு,

நீளமான மழைநாளில்
நிமிஷநேரச் சூரியன்,

தூரிகையில் மாயம்செய்யும்
துளியளவு தண்ணீர்,

மனம்நிறைந்த மகிழ்ச்சியில்
முகிழ்த்துவரும் கண்ணீர்,

இருளணிந்த மலையினில்
எங்கோ தெரியும் விளக்கு...

கருநீல வானத்தில்
கதிர்முளைக்கும் கிழக்கு,

வழிநடந்த பாதத்தை
வருடிவிடும் புல்மடி,

மார்கழிப் பூக்களின் 
மடிதுயிலும் மென்பனி,

கூடித்திளைத்த பின்
கொஞ்சநேரத் தனிமை,

காதலின் மொழியோடு
கலந்துவரும் ஒருமை,

இவையனைத்தும் ரசித்தபின்னும்
எழுதுவதைக் கவிதையென்பது
எந்த ஊர் நியாயம்?

***

25 மறுமொழிகள்:

ராமலக்ஷ்மி said...

நல்லாவே கேட்டுள்ளீர்கள் நியாயம்:)! அருமை சுந்தரா.

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Ramani said...

ரசித்தவைகளையெல்லாம் மிக நேர்த்தியாக
சொற்களுக்குள் அடக்கிவைத்து இது கவிதைதானா என்றால்
இது என்ன நியாயம் ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

அப்பாதுரை said...

பாடுவோர் பாடினால்.

அப்பாதுரை said...

இந்த Online Works For All தொல்லை தாங்க முடியவில்லையே!

சுந்தரா said...

//ராமலக்ஷ்மி said...
நல்லாவே கேட்டுள்ளீர்கள் நியாயம்:)! அருமை சுந்தரா.//

நன்றிகள் அக்கா :)

சுந்தரா said...

//Ramani said...
ரசித்தவைகளையெல்லாம் மிக நேர்த்தியாக
சொற்களுக்குள் அடக்கிவைத்து இது கவிதைதானா என்றால்
இது என்ன நியாயம் ?
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3//

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ரமணி சார்!

சுந்தரா said...

//அப்பாதுரை said...
பாடுவோர் பாடினால்.//

:) நன்றிகள் ஐயா!

ஹேமா said...

ரசிப்பதைத்தானே கவிதையாக்கலாம் சுந்தரா !

சுந்தரா said...

வாங்க ஹேமா :) நன்றிகள்!

அப்பாதுரை said...

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

Ramani said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கீதா said...

அடுக்கிய ரசனைகள் அத்தனையையும் மனக்கண்ணில் கொணர்ந்து ரசித்துவிட்டு ஒற்றை வார்த்தையில் அருமை என்று சொல்லிப்போவது எந்த ஊர் நியாயம்? ஆனால் அதை மிஞ்சிய வார்த்தை எதுவும் அகப்படவில்லையே.. நான் என்ன செய்வது? கருவும் கவியும் பிரமாதம் சுந்தரா.

ராமலக்ஷ்மி said...

அதீதம் வலையோசையில்..
http://www.atheetham.com/story/valaiyosai-10

வாழ்த்துகள் சுந்தரா தொடர்ந்து சிறப்பாக உங்கள் இலக்கியப் பயணம் தொடர!!

Ramani said...

குறிஞ்சி பூத்து வெகு நாளாகிவிட்டதே
கவிதைக் குறிஞ்சியும் நிஜக் குறிஞ்சி போலத்தானா
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

Ramani said...

எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை ,விருதினை
என் மனம் கவர்ந்த பதிவினைத் தரும் தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

கவிதையாக வார்த்தைகள் வரும்போது நல்லா இருக்குன்னு சொல்லாட்ட எப்படி:)
திரு.ரமணி அவர்களின் விருது உங்கள் வழி வந்ததற்கு பாராட்டுகள் சுந்தரி.

கலைவேந்தன் said...

அன்பின் சுந்தரா அவர்களுக்கு,
கலையின் அன்பான வணக்கங்கள்.. என்னை நினைவு இருக்குமென எண்ணுகிறேன்.

ஓர் அரிய தொகுப்பினை வழங்கும் குறிக்கோளில் இணையத் தமிழ்க் கவிதைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தொகுக்கும் ஒரு சாதனை செய்ய முயலும் என் சிறு முயற்சியில் தங்களுடைய கவிதைகளும் இடம்பெறுகின்றன.

http://kavithaikkalaiulagam.freeforums.org/forum-f11.html

இதில் இதுவரை தங்கள் 90 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

அங்கே வருகை தந்து பார்வையிட்டு விடுபட்ட தங்கள் கவிதைகளைப் பதியும்படி அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த தளம் முழுக்க முழுக்க கவிஞர்களுக்கும் கவிதைகளுக்குமான தளம் என்பதால் தங்கள் வருகையும் தருகையும் மிக அவசியமாகின்றது.

அன்பு வாழ்த்துகளுடன்
கலை

Esther sabi said...

தூரிகையில் மாயம்செய்யும்
துளியளவு தண்ணீர்,

மனம்நிறைந்த மகிழ்ச்சியில்
முகிழ்த்துவரும் கண்ணீர்,

வாழ்த்துகள் பிரமாதம் ./...........

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

அறிவன்#11802717200764379909 said...

எளிதாக ரசிக்க வைக்கும் கவிதையில் சேர்க்கலாம்...

கவிதைகள் பற்றிய பதிவுகளில் நான் பொதுவாகப் பயந்து கொண்டேதான் பின்னூட்டமிடுவது வழக்கம்.காரணம் எனது கூடப் பிறந்த குணமான calling a spade as spade ! :))

இந்தக் கவிதையில் சற்று நெருடும் வரி
|| இருளணிந்த மலையினில்
எங்கோ தெரியும் விளக்கு... ||

எங்கோ தெரியும் விளக்கு' விற்குப் பதிலாக இன்னும் சந்த,ஓசை,பொருள் நயத்துடன் முயற்சிக்கலாம்..

எனக்குத் தோன்றுவது,

இருளணிந்த மலையினிலே
கண்சிமிட்டுமோர் விளக்கு.

:))

srujana said...

Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions. Earn points for referring your friends and exchange your points for cool gifts.

Anonymous said...


Greetings!
If you're looking for an excellent way to convert your Blog visitors into revenue-generating customers, join the PayOffers.in Ad Network today!
PayOffers India which is one of the fastest growing Indian Ad Network.
Why to Join PayOffers India?
* We Make Your Blog Into Money Making Machine.
* Promote Campaigns With Multiple Size Banner Ads.
* Top Paying and High Quality Campaigns/Offers...
* Earn Daily & Get Paid Weekly Through check,Bank deposit.
* 24/7, 365 Days Online Customer Support.
Click here and join now the PayOffers India Ad Network for free:
http://payoffers.co.in/join.php?pid=21454
For any other queries please mail us at Neha@PayOffers.co.in
With Regards
Neha K
Sr.Manager Business Development
Neha@PayOffers.co.in
www.payoffers.co.in
Safe Unsubscribe, You are receiving this relationship message, if you don't want to receive in the future, Reply to Unsubscribe@PayOffers.co.in Unsubscribe

சேக்காளி said...

//கூடித்திளைத்த பின்
கொஞ்சநேரத் தனிமை//
போல் அத்தனை ருசியையும் திரும்பவும் ரசிக்க காரணம்
"இந்த கவிதை" தானே.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails