குளக்கரை விடியல் (ஒரு இயற்கை ஓவியம்)



இத்தனைபேர் சுற்றிவர
அத்தனை அழகா நான்!?
மீசை முறுக்குது ஆசைச்சூரியன்... 


சூரியக்கதிர் வருடச் 
செவ்விதழ் விரித்தது 
தண்ணீர்க் குளத்துத் தாமரை...

தாமரை இதழ்விரியத்
தன் முகம் புதைத்தது
சந்திரனைக் காதலிக்கும் அல்லி... 

அல்லிக் குளத்தினில் 
வெள்ளிச் சிதறல்கள் 
துள்ளித் திரிகிற மீன்கள் ...

மீன்களைப் பார்த்ததும் 
மோகம் பெருகிவர 
மோனத் தவமியற்றும் கொக்கு... 

கொக்கிற்குப் போட்டியாய் 
குளக்கரையில் தவமிருக்கும் 
ஒற்றைக்கால் அரசமரம்... 

அரசமரத்தடியில் 
அசையா நெடுந்தவம், 
அன்னையைப்போல் பெண்தேடும் பிள்ளை!


*********




(இது ஒரு மீள்பதிவு)

கருத்துகள்

  1. வணக்கம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனம் கொள்ளை கொண்ட குளக்கரை விடியலை வாரத்தைகளில் வடித்து வாசகரும் மனக்கண்ணில் ரசிக்கச் செய்தமை அழகு. வரிக்கு வரி ரசனை. பாராட்டுகள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ரூபன்!

    பதிலளிநீக்கு
  5. //ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...// - நன்றிகள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!