காணாமல் போனவை பற்றிய அறிவிப்பு!




ஒற்றெழுத்துக்கள்
உறவுகளில் உண்மை
சுத்தமான காற்று
கொத்தி விளையாடும் குருவிகள்

கிட்ட ஓடிய நீரோடை
கீற்றுப் பந்தலின் குளிர்ச்சி
ரெட்டைச்சடைப் பின்னலில்
வட்டத் தோரணமாய்ப் பூக்கள்

முற்றத்தில் சாணம்
முறமெடுத்துப் புடைக்கும் பெண்கள்
தொட்டி கட்டிய கிணறுகள்
வட்ட வட்டமாய் எருமுட்டை

முட்டை அடைவைத்து
இரு பத்தொருநாள் காத்திருந்து
முற்றத்தில் திரியவிடும்
கோழிக் குடும்பம்...

எட்டணாவுக்குக் கிடைக்கும்
பத்துத் தேன்மிட்டாய்
கட்டிச் சூடமிட்டாய்
கரையாத கல்கோனா

அடுப்பில் சுட்ட பனம்பழம்
அனலில் வெந்த பனங்கிழங்கு
மடிப்புவைத்துக் கட்டும்
இடுப்பைச் சுற்றிய தாவணி

பொத்திவைத்த பிரியங்களைச்
சுமந்துவரும் தபால்காரர்
பெட்டிவைத்துத் தலையில்
விற்றுவரும் வளையல்காரர்

இப்படி,
எத்தனையோ காணவில்லை,
தேடினாலும் கிடைக்கவில்லை...

கோடிப் புண்ணியமாகும்,
கொஞ்சம் கூடிக் கண்டுபிடியுங்களேன்!


**கல்கோனா** - இது தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் விற்ற ஒரு மிட்டாய். வாயில் கரையாமல் நீண்டநேரம் கல் போலக் கிடப்பதால் அந்தப் பெயர்.

கருத்துகள்

  1. எப்படித் தேடினும் கிடைக்காத
    அபூர்வங்கள் இவைகள்
    அனுபவித்து இரசித்தவர்களுக்குத்தான்
    இவைகளின் அருமை புரியும்
    அற்புதமான படைப்பு
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    கற்பனை நன்று... அற்புத வரிகள் கோழி 21 நாள் அடைக்காத்து குஞ்சு வெளிவரும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் ரூபன்.

    மாற்றிவிட்டேன். நீண்டநாள் ஆனதால் நாட்களின் எண்ணிக்கை மறந்துவிட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!