ஊருக்குச் சென்றுவந்தான்
உறவுகளை உதவிகேட்டான்
வாரக்கணக்காய்
வரமறுத்த அதை நினைத்து
நேரங்காலமின்றி
யோசித்துத் தீர்ந்துபோனான்...
போகிறபோக்கில்
எல்லாரும் செய்வதுபோல்
தானும் செய்துவிடத்
தலைகீழாய் நின்றுபார்த்தான்...
விரட்டி விரட்டிப்போனதில்
வீணாய்ப்போனது தூக்கம்
கிடைக்காது நமக்கென்று
கிழித்துப்போட்டது ஏக்கம்...
உறக்கம் பிடிக்காத
இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளில் தொலைந்துபோனான்...
கடைசியாய்,
கோர்த்துப்பார்த்த வார்த்தைகளை
கோபத்தில் கலைத்துப்போட்டான்...
அட,காகிதத்தில் கிடந்தது கவிதை!!!
Thursday, January 7, 2010
தூக்கம் கெடுத்த கவிதை!
Labels: கவிதை
Posted by சுந்தரா 2 comments
Subscribe to:
Posts (Atom)
