பெற்ற மனசு
 கல்லூரி விடுதிக்குப்போன கடைக்குட்டியின் முகம் கண்ணிலேயே  நிற்க, காசுதேற்றும் மும்முரத்தில் கீரை விற்றுக்கொண்டிருந்தாள் அவள்...  இருக்கப்பட்டவர்கள் இறைச்சியையும் இல்லாதவர்கள் எலும்பையும் வாங்கிப்போக, ஞாயிற்றுக்கிழமையைச் சபித்தது அந்த ஏழைத்தாயின் மனசு...  எண்ணிப்பார்த்த சில்லறை இளக்காரமாய்ச் சிரிக்கையில், கல்லூரிக்குப் போகிற கடைசி பஸ்ஸும் கடந்துபோய்விட,  இடுப்புச் சேலையில் ஏக்கத்தையும் முடிந்தபடி, வாடிய கீரையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள்...  ஆனால், அவளை விட்டுச் சாலையிலேயே நின்றது  சங்கடத்துடன் மனசு. ***