இடுகைகள்

யூத்ஃபுல் விகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலாவதி மனிதம்!

படம்
படம் : நன்றி யூத்ஃபுல் விகடன் காசுக்கும் பணத்துக்கும் விலைபோகும் மனிதர்களால் நாளாக நாளாக நாடிதளருகிற நம்பிக்கை... தொட்டுத் துடைத்தாலும் ஒட்டியதை எடுத்தாலும் கெட்டுப்போனதெல்லாம் பணமாகும் புதுவித்தை... தப்பைச் செய்தவரின் தலைகாக்கும் பினாமியாய் கெட்டுப்போய்க் கிடக்கிற குப்பை மேடுகள்... காசு கொடுத்து நம்பிக்கை வாங்கினாலும் காவு கொள்ளப்படும் மனித உயிர்கள்... உயிரைக் கொடுத்தேனும் நீதிகாத்த நாட்டினில் உயிரை எடுத்தேனும் பணம்சேர்க்கும் மனிதர்கள்... வணிகமயமாகிவிட்ட வாழ்க்கையின் போக்கினில் காலாவதியாகிப்போனது மனிதமும்கூடத்தான்...

கோபங்கள் கலைகையில்...

படம்
யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே... விகடனுக்கு நன்றி! கோபங்கள் கலைகையில்... **************************** இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்கிற இடுப்புக் குழந்தையாய் அழுத்தமாயிருந்தது கோபம்... தோற்கிற அறிகுறிகள் தென்பட்ட மாத்திரத்தில் இறக்கிவிடப்பட்ட குழந்தையின் எரிச்சல் அழுகுரலாய் வெடித்துக்கிளம்பியது கண்ணீர்... கண்ணீர் துடைத்துவிட்ட கைகளின் ஸ்பரிசத்தில் மெல்லப் புரிந்தது முழுமையான கரிசனம்... கரிசனத்தின் பிடியில் கர்வங்கள் கழன்றுவிழ, இழுத்தணைத்துக்கொண்டு தோளில் விம்மியது அன்பு!

என்னோட கதையும் சோகம்தான்!

வெள்ளி செவ்வாய் தவிர மத்தநாளில் விரதம் அதுவும், வெள்ளை வெறுஞ்சோறு வெஞ்சனமெல்லாம் இல்ல... அள்ளிவச்ச சோறும் ஆடுகோழி தின்னுபோக எஞ்சிய மிச்சம்தான், என் வயிறும் நிறையுதில்ல... நல்லநாள் பெரியநாளில் நாலுகுடம் தண்ணி, வெல்லமிட்ட சோறு வேகவச்ச கடலை... பிள்ளைகள் பந்தடிக்கப் பேசாத நடுவர், பெண்களின் சண்டையிலோ கண்ணவிஞ்ச கடவுள்... இன்னுமென்ன சொல்ல, என்னுடைய பெருமையின்னு? பிள்ளையாரா யிருப்பதற்குப் பெருச்சாளியே தேவலாம்தான்... **************************************     இந்தக் கவிதையை யூத்ஃபுல் விகடனில் படிக்க,   இங்கே   அழுத்துங்க...

நெருப்பிலே பிறந்த சாதி

மேல்சாதிப் பெண்ணும் கீழ்ச்சாதிப் பையனும் உறவுகளை உதறிவிட்டு ஊரெல்லைக் கோயிலிலே மாலைமாற்றிக் கொண்டார்கள்... அடியும் தடியுமாக விடிந்தது அன்றைய பொழுது... கீழ்ச்சாதித் தெருவெங்கும் மேல்சாதித் தலைகள் மோதலில் உடைந்ததோ இருசாதிச் சிலைகள்... ஊர்மத்தி ஆலமரம் உட்கார்ந்த பெரிசுகள் வேரணைத்து உட்கார்ந்த வேடிக்கை மனிதர்கள்... சாதிவிட்டுச் சாதிமாறிக் கல்யாணம் செய்தவரை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க ஓலமிட்ட உறவுகள்... கோலமிட்ட தெருக்களெல்லாம் ஆளரவ மற்றுப்போய் ஆலமரத் தடியிருந்து ரசித்ததோ வசவுகள்... அடுப்பில் சோறுவைத்ததை மறந்து கூரைவீட்டு மீனாட்சி ஊர்வாயைப் பார்த்தபடி கதைகேட்டு நின்றிருக்க, ஆளெதுவும் பார்க்காமல் அந்தஸ்தும் அறியாமல் கீழ்ச்சாதித் தீ பரவி மேல்சாதித் தெருவணைக்க ஊரெல்லாம் ஒன்றாகி ஓடி யணைத்தது தீயை... அதற்குள், காற்றுக்கும் நெருப்புக்கும் இரையானது ஒருபகுதி... சாதி,சாதியென்று சத்தமிட்ட சனமெல்லாம் வீதிவேலை முடிந்ததென்று வீட்டுவேலை பார்க்கச் செல்ல, ஈரமான விழிகளும் எரிந்துபோன உடமையுமாய் அங்கே, வீடிழந்த சாதியொன்று வீதியிலே உதயமாச்சு... இந்தக்கவிதை, ய...