கோபங்கள் கலைகையில்...



யூத்ஃபுல் விகடனில் படிக்க, இங்கே...

விகடனுக்கு நன்றி!

கோபங்கள் கலைகையில்...
****************************


இறங்கமாட்டேனென்று
அடம்பிடிக்கிற
இடுப்புக் குழந்தையாய்
அழுத்தமாயிருந்தது கோபம்...

தோற்கிற அறிகுறிகள்
தென்பட்ட மாத்திரத்தில்
இறக்கிவிடப்பட்ட குழந்தையின்
எரிச்சல் அழுகுரலாய்
வெடித்துக்கிளம்பியது கண்ணீர்...

கண்ணீர் துடைத்துவிட்ட
கைகளின் ஸ்பரிசத்தில்
மெல்லப் புரிந்தது
முழுமையான கரிசனம்...

கரிசனத்தின் பிடியில்
கர்வங்கள் கழன்றுவிழ,
இழுத்தணைத்துக்கொண்டு
தோளில் விம்மியது அன்பு!

கருத்துகள்

  1. //இறங்கமாட்டேனென்று
    அடம்பிடிக்கிற
    இடுப்புக் குழந்தையாய்
    அழுத்தமாயிருந்தது கோபம்...//

    ஆரம்பமே அழகு. அன்புக்கே என்றும் வெற்றி. அருமையான கவிதை சுந்தரா.

    பதிலளிநீக்கு
  2. //இறங்கமாட்டேனென்று
    அடம்பிடிக்கிற
    இடுப்புக் குழந்தையாய்
    அழுத்தமாயிருந்தது கோபம்...//

    அழகான துவக்கம்...!

    பதிலளிநீக்கு
  3. நன்றி அக்கா!

    நன்றி சத்ரியன்!

    பதிலளிநீக்கு
  4. குறிஞ்சி மலர்கள் எனையும் இங்கு ஈர்த்து வந்தது
    மிகஅருமையான கவிதை சுந்தராக்கா,
    எழுத்துக்களினால் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் கலை உங்கள் கவிதை. :)

    பதிலளிநீக்கு
  5. உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி பாலன் தம்பி :)

    அடிக்கடி வாங்க.

    நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

ஜனனம்