நான் 'மூத்த' பிள்ளை!


விறகுக் கட்டை
விளக்குமாறு
கரண்டிக் காம்பு
கழற்றிப்போட்ட செருப்பு
பள்ளிக்கூட பெல்ட் 
பட்டை அடி ஸ்கேல்
இவையெல்லாம்,
'அடி'க்கடி பேசும் என்னிடம்...

அப்பாவும் சித்தியும்,
அவசியமென்றால் மட்டும்...

******

படம் : இணையத்திலிருந்து


கருத்துகள்

  1. வரிகள் மனதைப் பிசைகின்றன. இந்த வலி எந்தப் பிஞ்சுகளுக்கும் வேண்டாம் என மனம் பிரார்த்திக்கிறது.

    நல்ல கவிதை.

    நீண்ட நாட்களாக பதிவில்லையே உங்களிடமிருந்து என நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நன்றிகள் அக்கா.

    விடுப்பு கொஞ்சம் பெரியதாகிவிட்டது.இனி, வழக்கம்போல பதிவுகள் தொடரும் :)

    பதிலளிநீக்கு
  3. இதுபோன்ற வலிகள் வலுவானவை....சின்ன இதயங்களுப் பெரிய அடிகள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!