இடுகைகள்

அமீரகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு அமீரகத்துத் தமிழனின் அழுகுரல்!

இது என்னுடைய கவிதை அல்ல...அமீரகத்தில் பணிபுரியும் ஒரு சகோதரர் எழுதியதாக, நான் மின்னஞ்சலில் படித்த கவிதை. இதில்வரும் அபஷி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை. தெரிஞ்சவங்க சொன்னால் தெரிஞ்சுக்கலாம். இதோ, கவிதை... நாம் யார்? வளமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்! வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம் கரை ஒதுங்கிய அடையாளம் தெரிந்த நடை பிணங்கள்! சுதந்திரமாக சுற்றி திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் நிஜத்தை தொலைத்துவிட்டு நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் தொலைதூரத்தில் இருந்து கொண்டே தொலைபேசியிலே குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்! கடிதத்தை பிரித்தவுடன் கண்ணீர் துளிகளால் கானல் நீராகிப் போகும் மனைவி எழுதிய எழுத்துக்கள்! ஈமெயிலிலும் இண்டர்நெட்டிலும் இல்லறம் நடத்தும் கம்ப்யூட்டர் வாதிகள்! நலம் நலமறிய ஆவல் என்றால் பணம் பணமறிய ஆவல் என கேட்கும் ஏ . டி . எம் . மெஷின்கள்! பகட்டான வாழ்க்கை வாழ பணத்திற்காக வாழக்கையை பறி கொடுத்த பரிதாபத்துக்குரியவர்கள்! ஏ . சி . காற்றில் இருந்துக் கொண்டே மனைவியின் மூச்சுக்காற்றை முற்றும் துறந்தவர்கள்...