வேலியோரத்து மரங்கள்
அந்தப்பக்கம் பூக்காதே, அங்கெல்லாம் காய்க்காதே, சொந்தமாயிருந்ததெல்லாம் நேற்றோடு முடிஞ்சுபோச்சு... வேலியோர மரத்திடம் விளக்கிச் சொல்ல முடியாமல், முள்கம்பி போட்டு முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா... ஆனாலும், வாடிநின்ற தருணத்தில் பகிர்ந்துகொண்ட நீருக்காக, கண்ணுக்குத் தெரியாமல் உறவாடிக்கொண்டன, மண்ணுக்குக்கீழ் வேர்களும் மௌனமாய்ச் சில மனங்களும்!