வேலியோரத்து மரங்கள்
அந்தப்பக்கம் பூக்காதே,
அங்கெல்லாம் காய்க்காதே,
சொந்தமாயிருந்ததெல்லாம்
நேற்றோடு முடிஞ்சுபோச்சு...
வேலியோர மரத்திடம்
விளக்கிச் சொல்ல முடியாமல்,
முள்கம்பி போட்டு
முறுக்கிக்கொண்டிருந்தார் அப்பா...
ஆனாலும்,
வாடிநின்ற தருணத்தில்
பகிர்ந்துகொண்ட நீருக்காக,
கண்ணுக்குத் தெரியாமல்
உறவாடிக்கொண்டன,
மண்ணுக்குக்கீழ் வேர்களும்
மௌனமாய்ச் சில மனங்களும்!
மண் மனக்கிற இன்னொரு கவிதை.பிறந்த மண்ணிலிருந்து.நல்லாருக்கு சுந்தரா.
பதிலளிநீக்குமிக அருமை சுந்தரா.
பதிலளிநீக்கு//ஆனாலும்,
வாடிநின்ற தருணத்தில்
பகிர்ந்துகொண்ட நீருக்காக,
கண்ணுக்குத் தெரியாமல்
உறவாடிக்கொண்டன
மண்ணுக்குக்கீழே வேர்களும்
மௌனமாய்ச் சில மனங்களும்.//
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மரங்களோடு வேலிக்கு இருபுறமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் உறவுகளின் உணர்வுகளையும்.
அருமையாக மனங்களின் உணர்வுகளைக் கூறியிருக்கின்றீங்க சுந்தரா அக்கா, எப்படித்தான் அப்பா வேலி போட்டாலும் நாம பொட்டு ஒன்று(வேலிக்கு இடையில் புகுவதற்கான துவாரம்) போட்டிட மாட்டோமா..? பாராட்டுக்கள் அக்கா!
பதிலளிநீக்கு//காமராஜ் said...
பதிலளிநீக்குமண் மனக்கிற இன்னொரு கவிதை.பிறந்த மண்ணிலிருந்து.நல்லாருக்கு சுந்தரா.//
நன்றிகள் அண்ணா!
//மிக அருமை சுந்தரா.
பதிலளிநீக்கு//ஆனாலும்,
வாடிநின்ற தருணத்தில்
பகிர்ந்துகொண்ட நீருக்காக,
கண்ணுக்குத் தெரியாமல்
உறவாடிக்கொண்டன
மண்ணுக்குக்கீழே வேர்களும்
மௌனமாய்ச் சில மனங்களும்.//
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மரங்களோடு வேலிக்கு இருபுறமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் உறவுகளின் உணர்வுகளையும்.//
நன்றிகள் அக்கா!
//அருமையாக மனங்களின் உணர்வுகளைக் கூறியிருக்கின்றீங்க சுந்தரா அக்கா, எப்படித்தான் அப்பா வேலி போட்டாலும் நாம பொட்டு ஒன்று(வேலிக்கு இடையில் புகுவதற்கான துவாரம்) போட்டிட மாட்டோமா..? பாராட்டுக்கள் அக்கா!//
பதிலளிநீக்குபின்னே, கட்டாயம் போடணும் பாலன் தம்பி :)
நன்றிகள்!
m......kavikko ithey pol yezhiyirukkaaru:))
பதிலளிநீக்குneengalum......!!
arputham:)
நன்றிகள் இரசிகை!
பதிலளிநீக்குமுதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!