ஒன்றோடு ஒன்றைக்கூட்ட...
வேண்டாம்...முடியாது
லீவெல்லாம் கிடைக்காது...
இதுக்குப்பட்ட கஷ்டமே
இன்னும் மறக்கல,
புதுசா வேறயா?
போதும்டா சாமீ...
எதுக்குத்தான் இப்பிடி
அடம்பிடிக்கிறீங்களோ?
அண்ணன் தங்கை
எல்லாம் இருந்தும்
என்னத்தைக் கண்டீங்க?
பரிதாபமா பாத்துப்பாத்தே
படுத்துறீங்க நீங்க...
பாத்துக்க யாரும்
பாலைவனத்துக்கு வரமாட்டாங்க,
சோத்துக்கு நீங்க
திண்டாடிப்போவீங்க...
சரி,புள்ளைகிட்ட கேட்கலாம்
வேணுமா வேணாமான்னு...
ஒண்ணும் வேண்டாம்
பொம்மையெல்லாம் கேட்கும்,
அழுது அழுது
அம்மாவைப் படுத்தும்...
கண்ணே நீ வாடான்னு
கட்டி முத்தம்வைக்க,
ஒண்ணே போதுமென்று
முடிவாகிப்போனது வீட்டில்!
adada.... arumai... porul niraintha kavithai... yatharthamum.....
பதிலளிநீக்குnalla irukkunga
பதிலளிநீக்குஅந்தக் குழந்தையுமா வேண்டாங்குது!! கொடுமைதான்!!
பதிலளிநீக்குஒரே விதமான சிந்தனையலைகள்......மலரும் நினைவுகளுக்குப் போய்விட்டேன்...
பதிலளிநீக்குhttp://pettagam.blogspot.com/2007/11/blog-post_559.html
ஆமாம் பொருள் குவிந்த கவிதை.
பதிலளிநீக்குஅடடா இந்த ட்ரிக் நாங்க பயன்படுத்தாமப் போயிட்டோமே:)
பதிலளிநீக்குஅதிர்ஷ்டம் எங்களுக்குத் தான். நல்ல கவிதை.
அடடா, மூன்றுக்குப் பின்னால்தான் இந்தப் புத்தியே நமக்கு வந்தது.
பதிலளிநீக்குஒன்றோடே இருந்திருக்கலாம் :)
சூப்பர்...என்னோட எண்ணங்களை ஒட்டி இருக்கு...இந்தக் கவிதை! LoL!
பதிலளிநீக்குஇன்னும் ரெண்டு-மூணு வருஷம் கழிச்சு என் கூட விளையாட யாருமே இல்லைன்னு ராத்திரி பத்து மணிக்கு அழும் பாருங்க, அன்னிக்கு //நீங்க
பதிலளிநீக்குதிண்டாடிப்போவீங்க...////
:)) என்னவோ.. சரிதான்.
நல்ல கவிதை...
பதிலளிநீக்குஎங்க வீட்லயும் இந்த பாட்டுத்தான்.. பெரும்பாடா இருக்கு..
இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியல..
இன்னொரு ஒற்றுமை இதே template நேத்துதான் நான் மாத்தினேன் :-)
முடிஞ்சா நம்ம பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்க :-)
http://nrvivek.blogspot.com/2010/05/blog-post.html
//க.பாலாசி said...
பதிலளிநீக்குadada.... arumai... porul niraintha kavithai... yatharthamum.....//
வாங்க பாலாசி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//LK said...
பதிலளிநீக்குnalla irukkunga//
முதமுதலா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
நன்றிங்க!
//ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்குஅந்தக் குழந்தையுமா வேண்டாங்குது!! கொடுமைதான்!!//
வாங்க ஹுசைனம்மா...
பின்னே ஆறேழு வயசாச்சுன்னா அதுவும் யோசிக்க ஆரம்பிச்சிடுதில்லே :)
//பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்குஒரே விதமான சிந்தனையலைகள்......மலரும் நினைவுகளுக்குப் போய்விட்டேன்...
http://pettagam.blogspot.com/2007/11/blog-post_559.html//
உங்க கவிதையையும் பார்த்தேன் பாசமலர். தனக்குன்னா ஒண்ணு, அடுத்தவங்களுக்குன்னா ஒண்ணுதான் :)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
//காமராஜ் said...
பதிலளிநீக்குஆமாம் பொருள் குவிந்த கவிதை.//
அண்ணா, நிஜமாவா? :)
@sundara
பதிலளிநீக்குamanga muthal varugayethan, pathivulaga katthukkutti naan. mudinja namm veetu pakkam vaanga
//வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்குஅடடா இந்த ட்ரிக் நாங்க பயன்படுத்தாமப் போயிட்டோமே:)
அதிர்ஷ்டம் எங்களுக்குத் தான். நல்ல கவிதை.//
இது இப்போதைய அவசர உலகத்து சமாச்சாரம் வல்லிம்மா :)
நாங்களும்கூட இந்த ட்ரிக்கை பயன்படுத்தாதவங்கதான்.
//பாலன் said...
பதிலளிநீக்குஅடடா, மூன்றுக்குப் பின்னால்தான் இந்தப் புத்தியே நமக்கு வந்தது.
ஒன்றோடே இருந்திருக்கலாம் :)//
ரொம்ப வருத்தப்படாதீங்க பாலன் தம்பி :)
மகளும் மகன்களும் அடிக்கவரப்போறாங்க :)
//சந்தனமுல்லை said...
பதிலளிநீக்குசூப்பர்...என்னோட எண்ணங்களை ஒட்டி இருக்கு...இந்தக் கவிதை! LoL!//
உங்க கருத்துக்கு ஒட்டியிருக்குது அதுபோகட்டும்,
//ஒண்ணும் வேண்டாம்
பொம்மையெல்லாம் கேட்கும்,
அழுது அழுது
அம்மாவைப் படுத்தும்...//
நிச்சயமா பப்புகிட்டேருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்காதுன்னு நினைக்கிறேன் :)
// Vidhoosh(விதூஷ்) said...
பதிலளிநீக்குஇன்னும் ரெண்டு-மூணு வருஷம் கழிச்சு என் கூட விளையாட யாருமே இல்லைன்னு ராத்திரி பத்து மணிக்கு அழும் பாருங்க, அன்னிக்கு //நீங்க
திண்டாடிப்போவீங்க...////
:)) என்னவோ.. சரிதான்.//
வித்யா, நீங்க முல்லையைத்தானே சொன்னீங்க? ஏன்னா எங்க வீட்ல இந்தக்கதை கிடையாது :)
//விவேக் said...
பதிலளிநீக்குநல்ல கவிதை...
எங்க வீட்லயும் இந்த பாட்டுத்தான்.. பெரும்பாடா இருக்கு..
இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியல..
இன்னொரு ஒற்றுமை இதே template நேத்துதான் நான் மாத்தினேன் :-)
முடிஞ்சா நம்ம பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போடுங்க :-)
http://nrvivek.blogspot.com/2010/05/blog-post.html//
சீக்கிரமாப்பேசி ஒரு முடிவுக்கு வாங்க :)
உங்க சுவடுகளுக்கு வந்து பின்னூட்டமும் போட்டாச்சு.