வளர்பிறை வாய்ப்புகள்


அழைப்புவந்த வேலைக்கு
அவசரமாய்க் கிளம்பினான்...

வளர்பிறையில் போகலாமென்றாள்
வெத்திலை வாயுடன் பாட்டி;
அமைதியாய் ஆமோதித்தாள்
அடுக்களைப்பக்கமிருந்து அம்மா...

மறைமதிக் காலம்
முழுமையாகக் காத்திருந்து,
வளர்பிறை வந்ததும்
போய்விட்டுத் திரும்பிவந்தான்...

வாசலிலேயே காத்திருந்தது பாட்டி...
வருத்தத்தோடு சொன்னான்,
அமாவாசையில பிறந்த ஒருத்தன்
அந்த வேலையில்
அமர்ந்துவிட்டானென்று...

கருத்துகள்

  1. சரியாக சொன்னீர்கள்

    வாய்ப்புக்களை தவறவிடுவது எவ்வளவு
    தவறு என்பதை உணரவைத்தீர்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்லாச் சொன்னீங்க சுந்தரா.
    அருமை.

    “வரமாய் வாய்ப்புகள்
    தேடி வருகையில்
    வகையாய் பயன்படுத்திக்
    கொள்ளத் தவறினால்
    வானம் பார்த்த பூமியாகவே
    முடிந்து போகிறது வாழ்க்கை”

    இன்னும் பதியாத என் கவிதை ஒன்றின் முடிவு வரிகள்:)!

    பதிலளிநீக்கு
  3. அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லை என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதை சுந்தரா....இன்னும் அநேகர் இப்படித்தானே இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. //VELU.G said...

    சரியாக சொன்னீர்கள்

    வாய்ப்புக்களை தவறவிடுவது எவ்வளவு
    தவறு என்பதை உணரவைத்தீர்கள் //

    வருகைக்கு மிக்க நன்றி வேலு ஜி!

    பதிலளிநீக்கு
  6. //ராமலக்ஷ்மி said...

    நல்லாச் சொன்னீங்க சுந்தரா.
    அருமை.

    “வரமாய் வாய்ப்புகள்
    தேடி வருகையில்
    வகையாய் பயன்படுத்திக்
    கொள்ளத் தவறினால்
    வானம் பார்த்த பூமியாகவே
    முடிந்து போகிறது வாழ்க்கை”

    இன்னும் பதியாத என் கவிதை ஒன்றின் முடிவு வரிகள்:)!//

    நன்றிக்கா!

    கவிதை வரிகள் ரொம்ப நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  7. //அம்பிகா said...

    அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லை என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.//

    வாங்க அம்பிகா, நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //பாச மலர் / Paasa Malar said...

    நல்ல கவிதை சுந்தரா....இன்னும் அநேகர் இப்படித்தானே இருக்கிறார்கள்.//

    ஆமா மலர், எப்பத்தான் புரிஞ்சுக்குவாங்களோ...

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. நல்ல மென்மையான நகைச்சுவையுடன்கூடிய செய்தி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்...இயற்கை பேசுகிறேன்!

தமிழுக்கு வணக்கம்!

மழைக்காலத்து மலர்கள்!