எடை குறைக்கும் ரகசியம்!
ஓவர்வெயிட் ஒபிஸிட்டி
டயட்டில் இருக்கிறேன்,
ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று
அலட்டிக் கொள்ளுவதே
அன்றாடம் வழக்கமாச்சு...
மனசுக்குப் பிடித்ததைச்
சாப்பிடமுடியாமல்
மருத்துவரும் மருந்துமாகக்
கரைகிறது கைக்காசு...
உலகத்துத் தொலைக்காட்சி,
வீடெங்கும் வலைஆட்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது
மனிதர்களின் உடலாட்சி...
அரைக்க தரைபெருக்க
துவைக்க துணிஉலர்த்த
துடைக்க சமைத்துவைக்க
சமைத்ததை சுத்தம்செய்ய,
அத்தனையும் செய்துவைக்க
எந்திரங்கள் வந்திறங்க,
ஏறிக்கொண்டு போனது
எடையும் இயலாமையும்...
கால்விரலைப் பார்ப்பதே
கஷ்டமென்று சொல்லும்படி,
மேலெழுந்து நிற்கின்ற
மத்தள வயிற்றினால்,
இல்லாத வருத்தமெல்லாம்
சொல்லாமல் வந்துவிட,
கொல்லாமல் கொல்லுகிறது
கொலஸ்ட்ராலும் நீரிழிவும்...
வேதனையைக் குறைப்பதற்கு
விரதத்தைக் கடைப்பிடித்து,
சோதனை முயற்சியாகக்
கோதுமைக்கு மாறினாலும்,
உடலைக் குறைக்கின்ற
அவசியம் வந்துவிட்டால்,
வேலையைக்கூட்டிக்
கொஞ்சம்
விளையாட்டைப் பெருக்கிவிட்டால்,
உடல்சுமை கழிந்துவிடும்
இதுவே,
காசில்லாத எளிய வைத்தியம்.
******
அவசியமான ரகசியம்:)!
பதிலளிநீக்குசொன்ன விதம் சுவாரஸ்யம்!
நல்ல சொல்லுங்க இந்த ஊரறிந்த ரகசியத்தை ஆனா யாரும் பின்பற்ற மாட்டாங்க
பதிலளிநீக்குகவிதை அருமையாக இருந்தது
வேலையைக் கூட்டி ,உணவைக் குறைத்து....ம்ம் நன்றாக இருக்கிறது பாட்டு. சுந்தரா.;)
பதிலளிநீக்குமுயற்சிக்கலாம்.
ஒயிட் பாய்சன் எனப்படும் சர்க்கரை, உப்பை குறைப்பதும் நல்லது.
பதிலளிநீக்குநல்ல ரகசியம் (அதுவும் மத்தள வயிறு ஹா ஹா )
வாழ்த்துக்கள் சகோதரி
விஜய்
நகைச்சுவை கலந்த உண்மை
பதிலளிநீக்குநல்ல அறிவுரை, செய்யனும்.
பதிலளிநீக்குஅருமையான வழி,
பதிலளிநீக்குஆனால் .....
அதைச் செய்ய வலி
:-) நல்லாருக்கு கவிதை!
பதிலளிநீக்குஹா ஹா ஹா... சூப்பர்... கருத்துள்ள கருத்து
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்குங்க....
பதிலளிநீக்குசுந்தரா உங்கள் காசில்லா வைத்தியம் சூப்பரு,
பதிலளிநீக்கு