அந்திமழையும் அழகான காதலும்!


சட்டென்று வந்திறங்கியது
சாயங்காலத்து மழை...

சுமந்த
சட்டிமண்ணைக் கொட்டியவள்,
வேப்ப மரத்
தொட்டில் பிள்ளையையும்,
விளையாடிய பிள்ளையையும்
கிட்ட அணைத்தபடி
கூரைச் சரிவைத்தேட,

கட்டிய தலைப்பாகையை
கழற்றிப் பிடித்தபடி
மண்வெட்டியை போட்டுவிட்டுக்
கிட்டவந்தான் அவள் கணவன்...

ஒட்டுச் சேலையால்
பிள்ளைகளின் தலைதுடைத்துக்
கட்டியவன் பக்கம்
கனிவாகக் கைநீட்டித்
தொட்டவள் சொன்னாள்
துடைச்சிக்கோ என்று...

தொட்டவளை அருகழைத்துத்
துண்டாலே போர்த்திவிட்டுத்
தோற்றுப்போன தூவாணத்தைத்
துச்சமாக அவன் பார்க்க,

கொட்டுவதை நிறுத்திவிட்டுக்
கலைந்துபோயின மேகங்கள்...
நாளை,
புயலையும் கூட்டிவந்து
அந்தப்
பேரன்பை ரசிப்பதற்கு!

கருத்துகள்

  1. அடடா... பின்றீங்களே.... அன்பையும் காதலையும் பிரிக்க எந்த மழையால்தான் முடியும்...

    அழகு... அருமை.....

    பதிலளிநீக்கு
  2. நாளை புய‌லின் துணையோடு வரும் துவான‌த்தை
    இந்த‌ இனிய‌ குடும்ப‌ம் எதிர் கொள்ளுமழ‌கைக் காண‌
    காத்திருக்கிறோம். (அடுத்த‌ க‌விதைக்காய்)

    பதிலளிநீக்கு
  3. //க.பாலாசி said...

    அடடா... பின்றீங்களே.... அன்பையும் காதலையும் பிரிக்க எந்த மழையால்தான் முடியும்...

    அழகு... அருமை.....//

    வாங்க பாலாசி, நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. //VELU.G said...

    கவிதை அருமை//

    வாங்க வேலு ஜி, மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. //vasan said...

    நாளை புய‌லின் துணையோடு வரும் துவான‌த்தை
    இந்த‌ இனிய‌ குடும்ப‌ம் எதிர் கொள்ளுமழ‌கைக் காண‌
    காத்திருக்கிறோம். (அடுத்த‌ க‌விதைக்காய்)//

    புயல் வருமோ வராதோ, கவிதை கட்டாயம் வரும் :)

    நன்றிகள் வாசன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  6. அன்பைப் பொழியும் மழையாய் மனையாள்.அழகிய கவிதை பாராட்டுக்கள் சுந்தராக்கா.
    அடிக்கடி மழையில் நனையும் போது “அறிவில்லையா” ன்னு திட்டுவாங்கியதுதான் மிச்சம்.
    உங்க நாத்தனார்கிட்ட இப்போதே காட்டரேன் இக்கவியை :)

    பதிலளிநீக்கு
  7. //ராமலக்ஷ்மி said...

    அருமை சுந்தரா:)!//

    வாங்க அக்கா...நன்றி!

    பதிலளிநீக்கு
  8. @பாலன்

    நன்றி பாலன் தம்பி,

    நாத்தனாரோட பதில் என்னன்னும் சொல்லுங்க :)

    @V.Radhakrishnan,

    நன்றிகள் ரங்கன்!

    பதிலளிநீக்கு
  9. கவிதை அருமையாய் இருக்கின்றது அக்கா.

    கிராமத்து வாசனை கவிதையில் மலர் தூவி விளையாடியுள்ளது.

    நன்றியுடன்

    சிவஹரி

    பதிலளிநீக்கு
  10. அருமையான காதல் கவிதை... சின்ன ஒரு விசியது வெச்சு பெரிய ஒரு காதலை பதிவு செஞ்சுடீங்க... கண் முன்னாடி அந்த காட்சிய பாத்தா மாதிரி தோண வெச்சது தான் பதிவோட வெற்றி... சூப்பர்

    பதிலளிநீக்கு
  11. அசத்திட்டீங்க சுந்தரா.அந்திமழை கொண்டுவந்ததோ தென்றல்கவிதையை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழுக்கு வணக்கம்!

நான்...இயற்கை பேசுகிறேன்!

ஜனனம்