எடை குறைக்கும் ரகசியம்!
ஓவர்வெயிட் ஒபிஸிட்டி டயட்டில் இருக்கிறேன், ட்ரெட் மில்லில் நடக்கிறேனென்று அலட்டிக் கொள்ளுவதே அன்றாடம் வழக்கமாச்சு... மனசுக்குப் பிடித்ததைச் சாப்பிடமுடியாமல் மருத்துவரும் மருந்துமாகக் கரைகிறது கைக்காசு... உலகத்துத் தொலைக்காட்சி, வீடெங்கும் வலைஆட்சி சிறைப்பட்டுக் கிடக்கிறது மனிதர்களின் உடலாட்சி... அரைக்க தரைபெருக்க துவைக்க துணிஉலர்த்த துடைக்க சமைத்துவைக்க சமைத்ததை சுத்தம்செய்ய, அத்தனையும் செய்துவைக்க எந்திரங்கள் வந்திறங்க, ஏறிக்கொண்டு போனது எடையும் இயலாமையும்... கால்விரலைப் பார்ப்பதே கஷ்டமென்று சொல்லும்படி, மேலெழுந்து நிற்கின்ற மத்தள வயிற்றினால், இல்லாத வருத்தமெல்லாம் சொல்லாமல் வந்துவிட, கொல்லாமல் கொல்லுகிறது கொலஸ்ட்ராலும் நீரிழிவும்... வேதனையைக் குறைப்பதற்கு விரதத்தைக் கடைப்பிடித்து, சோதனை முயற்சியாகக் கோதுமைக்கு மாறினாலும், உடலைக் குறைக்கின்ற அவசியம் வந்துவிட்டால், வேலையைக்கூட...