ஆச்சி ரொம்பத்தான் மாறிப்போச்சு!
அப்பல்லாம் ஆச்சிக்கு அடுத்த வீடே தெரியாது... எப்போதும் பிள்ளைகள், இல்லாவிட்டால் புருஷனென்று தப்பாமல் தன்வீட்டுக் கதையைத்தான் நமக்குச்சொல்லும்... ஊர்கண்ணு பட்டிடாம உலையடுப்பு அவிஞ்சிடாம ஆறிரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்துத் தான்பெற்று பேர்சொல்ல வளர்த்ததெல்லாம் பெருமிதம் பொங்கச்சொல்லும்... எப்போதாவது அலுத்துவிட்டால் இலவச இணைப்பாக, வச்சிருந்த நகைநட்டு, வளர்த்துவந்த ஆடு மாடு, முற்றத்து மரத்தடியில் நட்டுவைத்த சாமியென்று அத்தனை விஷயமும் அழகழகாய் அடுக்கிச் சொல்லும்... ஆனா, இப்பல்லாம் கதைகேட்டா எந்தக்கதை சொல்வதென்று ஆச்சி ரொம்பத்தான் தவிக்கிறது... அடுக்கடுக்காய்க் கஷ்டப்பட்ட அபியின் வீட்டில் நுழைந்து, அதிகாரம் குறையாத அரசியை அதிசயித்து, கஷ்டமே படும் அந்தக் கஸ்தூரிக்குக் கண்கலங்கி, துரதிர்ஷ்டம் தொடருகிற துளசிக்காய்த் துக்கம்கொண்டு, அர்ச்சனாவின் மாமியாரை ஆத்திரமாய்த் திட்டிவிட்டு, செல்லம்மாவின் கதைவரைக்கும் சொல்லிச்சொல்லி மாய்கிறது... இந்தக்கதை வேண்டாம் ஆச்சி, வேறுகதை சொல் என்றால் கள்ளிக்காட்டில் பார்த்த பள்ளிக்கூடக் கதையைச் சொல்ல, உள்ளபடி, ஏங்கித்தான் ...