இடுகைகள்

பொங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலசரக்குப் பட்டியல்!

ரெண்டு கிலோ அரிசி ரெண்டேரெண்டு தேங்காய் அரைக் கிலோ வெல்லம் அதே அளவு பருப்பு அம்பது கிராம் நெய்யி அதில பாதி முந்திரி ரெண்டு ரூபாய்க்கு ஏலம் ரெண்டோ மூணோ பழம் மனைவி சொல்லச்சொல்ல மகள் எழுதிக்கொடுத்தாள்... எழுதி நீட்டிய காகிதத்தில் பிள்ளையார் சுழி தவிர எல்லா இடத்திலும் நிழலாகத்தெரிந்தது, பாக்கி கேட்டு நச்சரிக்கும் பலசரக்குக் கடைக்காரரின் முகம்.