அவளும் தாயானாள்!

தாய்மைக் கென்றே சில தனித்தன்மைகள் இருக்கிறது.. வயிற்றில் சுமக்கையிலே ஒரு வரம் கிடைத்த பெருமை வரும்... பிள்ளை மடியிறங்கித் தவழ்கையிலோ மாபெரும் மகிழ்ச்சி வரும்... தோளிலே பிள்ளையுடன் தெருவிறங்கி நடக்கையில் முன்னெப்போது மில்லாத ஒரு தன்னம்பிக்கை தானேவரும்... தாயின் கரம்பிடித்துத் தான் நடந்த மகளொருத்தி தன்னையும் அதுபோல உயர்த்திக்கொள்ளுகிற தருணம் அது... அட, என்னை விடுங்கள்... அது அவளுக்கும் அப்படித்தானென்று அறிகையில் ஆச்சர்யம்தான் மிஞ்சியது... பிறந்ததிலிருந்தே அவளைப் பார்த்துப் பரிச்சயமுண்டு, பெற்றவளின் பின்னாலேயே சுற்றிச்சுற்றி வருவாள்... ஆனால், என்னவோ தெரியவில்லை... என்னுடைய குரல் மட்டும் ஏனோ அச்சுறுத்தும் அவளை... உடன்பிறந்த இரண்டுபேரும் வளர்ந்து இடம் பெயர்ந்தாலும் அவளுக்கு மட்டும் எப்போதும் அம்மாதான்... சட்டென்று ஒருநாள் சன்னல...